வீடு / சமையல் குறிப்பு / அரிசி கலந்து பாகற்காய் குழம்பு

Photo of Rice mix bitter gourd gravy by Mahi Venugopal at BetterButter
1535
4
4.5(0)
0

அரிசி கலந்து பாகற்காய் குழம்பு

Jul-13-2016
Mahi Venugopal
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் - 200 கிராம் (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்... விதை நீக்கி மோரில் ஊறவைக்கவும், கசப்பைப் போக்கவும்)
  2. வெங்காயம் - 1 பெரிய அளவு பொடியாக நறுக்கப்பட்டது
  3. தக்காளி - 1 பெரிய துண்டுகளாக நறுக்கப்பட்டது
  4. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  5. கடுகு - 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை - 1கையளவு (சுத்தப்படுத்தப்பட்டு கழுவப்பட்டது)
  7. கொத்துமல்லி - 2 தேக்கரண்டி (சுத்தப்படுத்தப்பட்டு, கழுவப்பட்டு பொடியாக நறுக்கப்பட்டது)
  8. மிளகாய்த் தூள் - 1தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  10. மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  11. வெல்லம் - 1 1/2 தேக்கரண்டி (பொடியாக்கப்பட்டது)
  12. புளிச்சாறு - 1 தேக்கரண்டி (அடர்த்தியாக)
  13. தேவையான அளவு உப்பு
  14. எண்ணெய் - 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான அளவு குறிப்பிடப்பட்டதை அருமையான சுவைக்குப் பயன்படுத்தவும்.
  2. ஒரு கடாயை குறிப்பிட்டபடி எண்ணெய் சேர்த்துச் சூடுபடுத்தி, கடுகைத் தாளிக்கவும். அது வெடிக்கட்டும். கடலை பருப்பைச்சேர்த்து சற்றே பொன்னிறமானதும் கறிவேப்பிலை அதன் பின் வெங்காயம் சேர்த்து பளபளப்பாகும் வரை வதக்கிக்கொள்ளவும். அதன்பின் தக்காளி சேர்த்து அது மிருதுவாகும்வரை வதக்கவும்.
  3. பாகற்காயைக் கழுவி மோரில் ஊறவைத்து, இவற்றை கடாயில் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும். பாகற்காயில் நிறம் சற்றே மாறும்.
  4. இந்த நேரத்தில் 1/2 டம்பளர் தண்ணர் சேர்த்து, மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், புளிச்சாறு, வெல்லாம்... ஆகியவற்றைச் சேர்த்து சிறு தீயில் வைக்கவும். பாகற்காய் வெந்துவிடும்.
  5. தண்ணீர் 1 தேக்கரண்டிக்குக் குறைநததும், கருகிடாமல் இருக்கக் கிண்டிக்கொண்டே இருக்கவும். இப்போது மீண்டும் வேகவைக்கவும், குழம்பாக மாறும். கொத்துமல்லி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
  6. இப்போது வெள்ளைச் சாதத்தோடுக் கலந்துகொள்ளவும், ரச சாதம் அல்லது தயிர் சாதத்தோடும் ருசியாக இருக்கும்.
  7. அது மிக மிக சுவையாக இருக்கும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்