BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / நெய் மைசூர் பாக்

Photo of Ghee Mysore Pak by Juvaireya R at BetterButter
0
3
0(0)
0

நெய் மைசூர் பாக்

Oct-31-2018
Juvaireya R
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

நெய் மைசூர் பாக் செய்முறை பற்றி

வாயில் வைத்தததும் கரையக்கூடிய நெய் மைசூர்பாக் வீட்டிலயே செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • పండుగలాగా
  • కర్ణాటక
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ஒரு கப் கடலை மாவு
  2. இரண்டு கப் நெய்
  3. ஒரு கப் தண்ணீர்
  4. 2 .5 கப் சர்க்கரை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் கடலை மாவை போட்டு நன்றாக இரண்டு நிமிடம் மட்டுமே வறுத்துக்கொள்ள வேண்டும்.
  2. பின் அதனை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  3. வேறொரு கடாயில் சர்க்கரை மற்றும் அதன் அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக கரையும் வரை கலந்து கொள்ள வேண்டும்
  4. சர்க்கரை கொதித்து வந்ததும் கடலை மாவை சிறிது சிறிதாக சேர்க்கவேண்டும்
  5. கடலை மாவை கட்டியில்லாமல் நன்றாக தேய்த்து தேய்த்து கலந்து கொள்ள வேண்டும்
  6. 15 நிமிடம் நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும் மிதமான தீயில்
  7. பின் உருக்கிய நெய்யை ஒவ்வொரு கரண்டியாக அதில் ஊற்ற வேண்டும்
  8. நெய் சேர்த்துக் கொண்டே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்
  9. இதேபோல் 2 கப் நெய் சேர்த்து குடிக்க வேண்டும்
  10. கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாக ஒரு பதத்திற்கு வரும்
  11. தோராயமாக இப்பதத்திற்கு வருவதற்கு 30 நிமிடத் திலிருந்து 35 நிமிடம் வரை ஆகலாம்
  12. பதத்திற்கு வந்ததும் அடுப்பை ணைத்து இக் கலவையை நெய் தடவிய பாத்திரத்தில் சேர்க்கவேண்டும்
  13. பாத்திரத்தில் சேர்த்த கலவையானது மிகவும் சூடாக இருக்கும் எனவே அறை வெப்ப நிலை வரும் வரை காத்திருக்கவும்.
  14. நன்றாக ஆறியதும் அதனை சிறு சிறு துண்டுகளாக கத்தியால் வெட்டி பரிமாறவும்
  15. வாயில் போட்டவுடன் கரையக்கூடிய நெய் மைசூர் பாக் தயார்
  16. இந்த பண்டிகை காலத்தில் நீங்களும் இந்த மைசூர்பாகை செய்து அசத்துங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்