வீடு / சமையல் குறிப்பு / சீப்பு சீடை , நட்சத்திர முறுக்கு, ரிப்பன் முறுக்கு (3இன் 1 )

Photo of seepu seedai , Star Murukku by Bena Aafra at BetterButter
645
1
0.0(0)
0

சீப்பு சீடை , நட்சத்திர முறுக்கு, ரிப்பன் முறுக்கு (3இன் 1 )

Oct-31-2018
Bena Aafra
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீப்பு சீடை , நட்சத்திர முறுக்கு, ரிப்பன் முறுக்கு (3இன் 1 ) செய்முறை பற்றி

மூன்று விதமான பலகாரம் ஒரே மாவில் செய்தது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு-2கப்
  2. பொட்டுக்கடலை-1கப்
  3. உப்பு-தேவைக்கேற்ப
  4. தேங்காய் பால்-1கப்
  5. பால் -1கப்
  6. ஓமம் -1ஸ்பூன்
  7. நெய்-1ஸ்பூன்
  8. எண்ணெய்-பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,உப்பு,கலந்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து ,அரிசி மாவுடன் கலந்து கொள்ளவும்.
  3. அவற்றுடன் ஓமம் கலந்து கொள்ளவும்.
  4. பிறகு தேங்காய் பால் எடுத்து ,அதனுடன் சாதா பாலும் கலந்து அடுப்பில் கொதிக்க விட்டு இறக்கவும்.
  5. அவற்றை மாவுடன் ஊற்றி நன்றாக மிருதுவாக மிசைந்து கொள்ளவும்.அவற்றை நெய் சேர்த்து பிசைந்து ஊற விடவும்.
  6. பிறகு முறுக்கு பிழியும் கட்டையில் அதற்கு ஏற்ற தட்டை வைத்து கொள்ளவும்.
  7. அவற்றில் மாவை வைத்து நீளமாக பிழிந்து கொள்ளவும்.
  8. அவற்றை கத்தியை வைத்து ஒரு சண்டுவிரல் அளவிற்கு கட் செய்து கொள்ளவும்.
  9. அவற்றை விரலால் மோதிரம் போல் சுற்றி , இரண்டு ஓரத்தையும் ஒட்டி வைத்துக் கொள்ளவும்.
  10. தேவைக்கேற்ப வடிவத்தில் செய்து கொள்ளவும்.முறுக்காகவும் பிழிந்து கொள்ளவும்.
  11. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த சீடை முறுக்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  12. சீப்பு சீடை, முறுக்கு தயார் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்