Photo of MOHANTHAL by Radha Balu at BetterButter
480
1
0.0(0)
0

மோகன்தால்

Oct-31-2018
Radha Balu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மோகன்தால் செய்முறை பற்றி

தீபாவளி பண்டிகைக்கான ஸ்பெஷல் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தீபாவளி
  • குஜராத்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலை மாவு - 1/4 கிலோ
  2. நெய் - 1/4 கிலோ
  3. கோவா – 100 கிராம்
  4. பால் – 2 டேபிள்ஸ்பூன்
  5. சீனி – 150 கிராம்
  6. ஏலப்பொடி, குங்குமப்பூ – சிறிது
  7. சிறிதாக நறுக்கிய பாதாம், மிந்திரி துண்டுகள்.

வழிமுறைகள்

  1. கடலை மாவை நன்கு சலித்து, 2 டேபிள்ஸ்பூன் நெய்யை உருக்கி விட்டு, பாலையும் கை பொறுக்கும் சூடாக விட்டுப் பிசறி, (அரிசி பிட்டுக்கு பிசறுவது போல்) அரை மணி நேரம் வைக்கவும்
  2. கோவாவை நன்கு உதிர்த்து, 2 ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். குங்குமப்பூவை சிறிது வெதுவெதுப்பான பாலில் ஊற வைக்கவும்.
  3. பிசறிய கடலை மாவை ஒரு சல்லடையில் நன்கு அழுத்தி, கட்டிகளின்றி சலிக்கவும்.
  4. மீதமுள்ள நெய்யைக் காய வைத்து அதில் சலித்த மாவைப் போட்டு கேஸை சிம்மில் வைத்து நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். 
  5. அதிலேயே வறுத்து வைத்துள்ள கோவாவை சேர்த்து, மேலும் இரண்டு பிரட்டு பிரட்டி வேறு பாத்திரத்தில் கொட்டவும்.
  6. சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் வரை நீர் விட்டு கெட்டி கம்பி பாகு வைக்கவும். 
  7. அதில் வறுத்த மாவு, ஏலபொடி, குங்குமப்பூ சேர்த்து விடாமல் கிளறவும்.
  8. பத்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
  9. மேலே துண்டாக்கிய மிந்திரி, பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும். துண்டுகளாக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்