வெல்லம் பயன்படுத்தி உத்திரவாதமான அதிரசம் | மிருதுவான அதிரச உணவுக்குறிப்பு | Authentic Adhirasam Using Brown Sugar | Soft Athirasam Recipe in Tamil

எழுதியவர் Sangeetha Priya R  |  13th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Authentic Adhirasam Using Brown Sugar | Soft Athirasam Recipe by Sangeetha Priya R at BetterButter
வெல்லம் பயன்படுத்தி உத்திரவாதமான அதிரசம் | மிருதுவான அதிரச உணவுக்குறிப்புSangeetha Priya R
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  7

  மக்கள்

37

0

வெல்லம் பயன்படுத்தி உத்திரவாதமான அதிரசம் | மிருதுவான அதிரச உணவுக்குறிப்பு recipe

வெல்லம் பயன்படுத்தி உத்திரவாதமான அதிரசம் | மிருதுவான அதிரச உணவுக்குறிப்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Authentic Adhirasam Using Brown Sugar | Soft Athirasam Recipe in Tamil )

 • எண்ணெய் - 1.5 கப் அல்லது பொரிப்பதற்குத் தேவையான அளவு
 • நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
 • ஏலக்காய தூள் - 2 தேக்கரண்டி
 • தண்ணீர் 1/3 கப் + 2 தேக்கரண்டி
 • ரீபைண்டு செய்யப்படாத இயற்கை நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் - 1.75 கப்
 • பொன்னி பச்சரிசி - 1 கப்

வெல்லம் பயன்படுத்தி உத்திரவாதமான அதிரசம் | மிருதுவான அதிரச உணவுக்குறிப்பு செய்வது எப்படி | How to make Authentic Adhirasam Using Brown Sugar | Soft Athirasam Recipe in Tamil

 1. அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். நான் மாவு அரிசி பயன்படுத்தினேன். கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி துணியில் தட்டி 30 நிமிடம் உலர்த்தவும். அரிசியைத் தொகுப்புகளா அரைத்துக்கொள்ளவும். 2 கப்புக்கு தோராயமாக 4 தொகுப்பு. அதை அரைத்த பிறகு உடனே மாவை சலித்துக்கொள்ளவும்
 2. அதனால் உங்களிடம் கரடுமுரடான அரிசி (மீந்துபோனது) இருந்தால் அரைக்கும்போது அடுத்த தொகுப்பில் சேர்த்துக்கொள்ளவும். தயாரிக்கப்படும் அரிசி மாவில் அப்படிச் செய்ததும், வெல்லப்/சர்க்கரைப் பாகு தயாரிக்கும்வரை அழுத்தமாக அழுத்தவும், அப்படியாக செய்தால் மாவு உலர்ந்துவிடுவதை நீங்கள் தடுக்கலாம்.
 3. வெல்லத் தயாரிப்பு. வெல்லத்தை அல்லது நாட்டு சர்க்கரையை அளந்துகொள்ளவும். 1/3 கப் + 2 தேக்கரண்டி தண்ணீரை சர்க்கரையோடு சேர்த்துக்கொள்ளவும்.
 4. மிதமானச் சூட்டில் கொதிக்கவிட்டு, சர்க்கரை கரைந்ததுமே நீங்கள் வடிக்கட்டி 5-8 நிமிடங்கள் கொதிக்கவிடலாம் (தோராயமாக). பாகிலிருந்து நுரை வரும், பதத்தைச் சோதித்துப் பார்த்துக்கொள்ளவும்.
 5. அதற்காக ஒரு சிறிய கப்பில் தண்ணீர் எடுத்து கொஞ்சம் வெல்லப் பாகிட்டுக்கொள்ளவும், சரியான பதத்தில் இருந்தால் வெல்லம் தண்ணீரில் தனியாக ஒட்டாமல் இருக்கவேண்டும். விரல்களால் தேய்த்தால் அங்கே கரை இருப்பதை நீங்கள் பார்க்கலாம் (எப்போதும் பாகு கரையாது
 6. கலவைப் பகுதி. மேலுள்ளச் சூடானப் பாகை எடுத்து தயாரித்து வைத்துள்ள அரிசி மாவில் கலந்துகொள்ளவும். கற்றுக்கொள்பவர்கள் சில தேக்கரண்டி வெல்லத்தையும் அரிமாவையும் ஒன்றாகக் கலப்பதற்கு முன் பத்திரப்படுத்திக்கொள்ளலாம்.
 7. அதன்படியாக நீங்கள் பதத்தை இறுதியில் சரிசெய்துகொள்ளலாம். பயன்படுத்தினால் ஏலக்காய்த் தூள், எள்ளு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
 8. இந்தப் பதத்தை நீங்கள் எப்போதாவது பெறவில்லை என்றாலும் மாவு தண்ணீர் போல் இருந்தாலும் பாதுகாத்து வைத்துள்ள பாகை சேர்த்துக்கொள்ளவும். அதே சமயம் மாவு ஒட்டினால் பாதுகாத்த அரிசியை அதிகமாக ஒரு சமயத்தில் ஒரு தேக்கரண்டி வீதம் சேர்க்கவும்.
 9. தொடர்ந்து சில நிமிடங்கள் கலக்கிக்கொண்டே இருக்கவும், அப்போதுதான் வெப்பம் வேகமாக வெளியேறும். முற்றிலுமாக ஆறியதும் மேல் பக்கத்தை மூடி அறையின் வெப்பத்தில் இரவு முழுவதும் குறைந்தது 3 நாள்களுக்கு வைக்கவும்.
 10. பொரிப்பதற்கு நீங்கள் தயாரானதும், சம அளவு உருண்டைகளை மாவிலிருந்து செய்துகொள்ளவும். ஆரம்பத்தில் மாவு மடியும் ரிப்பன் போல விழவேண்டும். 5-6 நிமிடங்களுக்குப் பிறகு வெல்லம் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சப்பட்டு இறுகிவிடும்.
 11. அதனால் இதுதான் சரியான பதம். மாவை சற்றே தளர்வாக விடவும். அதனால் 8 மணி நேர நொதித்தலுக்குப் பிறகு நேர்த்தியான ஒன்றாக மாறிவிடும்.
 12. பொரிக்கும் பகுதி. ஒரு தட்டை/சிப்லாக் ஷீட்டை எடுத்து எண்ணெய் தடவி ஒரு உருண்டையை எடுத்து மேல் பக்கத்தில் தட்டி வட்டவடிவத்தில் நடுத்தர தடிமனில் மெருதுவான அதிரசத்திற்குச் செய்துகொள்ளவும்.
 13. ஒவ்வொரு உருண்டையையும் வட்டவடிவில் செய்யும்போதே வானலியில் எண்ணெயைச் சூடுபத்திக்கொள்ளவும். பொரிக்கும் வெப்பிநிலையும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். மிதமானத் தீயில் நீங்கள் பொரித்தெடுக்கவேண்டும்.
 14. எண்ணெய் அதிக சூட்டில் இருக்கக்கூடாக குறைவாகவும் இருக்கக்கூடாது. அதிக சூடு அதிரசத்தினை விரைவாக பழுப்பு நிறத்திற்குக் கொண்டுவந்துவிடும், உள்ளே முறையாக வெந்திருக்காது.
 15. மிகக் குறைவான வெப்பநிலை அதிரசத்தை கடினமாக்கி மொறுமொறுப்பாக்கிவிடும். அதனால் சரியான வெப்பநிலையில் வைக்கவேண்டும் (அதிரச மாவை சேக்கும்போது எண்ணெய் கொஞ்சம் சூடாக இருந்து அதன் வெப்பநிலை குறையவேண்டும்), ஒரு சமயத்தில் ஒன்றைச் சேர்க்கவும், வெளியே தள்ள ஆரம்பித்ததும் அடுத்ததைப் போடவும்
 16. உப்பியுள்ள அதிரசம் நல்ல அதிரசத்திற்கான அறிகுறி. பொன்னிறமான உடனே கூடுதல் எண்ணெயைப் பிழிந்துவிடவும். சமையல் பேப்பரால் சுற்றிலுமுள்ள கூடுதல் எண்ணெயை உறிஞ்சி எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
 17. கவனிக்கவும். வறுப்பதற்கு முன் கொஞ்சம் எள் சேர்த்துக்கொண்டேன். பொரித்த அதிரசம் ஆறியதும் காற்றுப்புகாத பாத்திரத்தில் அறையின் வெப்பத்தில் வைக்கவும்.

எனது டிப்:

அதிரச மாவை காற்றுப் புகாதப் பாத்திரத்தில் சேமித்து பிரிஜ்ஜில் வைத்து ஒரு மாதத்திற்கு மேல் பாதுகாக்கலாம். பொரித்தெடுக்க வேண்டும் எனும்போது தேவைப்படும் மாவை எடுத்து அறையின் வெப்பத்தில் குறைந்தது 1 மணி நேரம் வைக்கவும். மாவு கட்டியாக இருந்தால் பால் கொஞ்சம் சேர்த்துக் கலந்து உருண்டைகள் செய்து தட்டி அதன்பின் மேலே குறிப்பிட்டதுபோல் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Reviews for Authentic Adhirasam Using Brown Sugar | Soft Athirasam Recipe in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.