BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தார்வாத் பேடா

Photo of Dharwad peda by Krishnasamy Vidya Valli at BetterButter
164
0
0(0)
0

தார்வாத் பேடா

Nov-02-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தார்வாத் பேடா செய்முறை பற்றி

கர்நாடகத்தின் மிகவும் பழமையான தார்வாத் என்ற ஊரில் செய்யப்படும் மிகவும் பழமையான இனிப்பு வகை இது. இந்த தீபாவளிக்கு வீட்டில் செய்து அசத்துங்கள். ஒருவருக்கு இரண்டு வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • కర్ణాటక
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • ఉడికించాలి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொழுப்பு சத்து அதிகம் உள்ள பால் ஒரு லிட்டர்
  2. சீனி 1/3 கப்+2 மேஜைக்கரண்டி(பிரட்டுவதற்கு)
  3. பால் அரை கப் முதல் முக்கால் கப் (கிளறுவதற்கு)
  4. நெய் 2 மேசைக்கரண்டி
  5. ஏலப்பொடி நான்கு சிட்டிகை
  6. எலுமிச்சை சாறு 1 1/2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. நான்ஸ்டிக் கடாயில் ஒரு லிட்டர் பாலை கொதிக்க விடவும்
  2. நன்றாக கொதிக்கும் போது சிறிது சிறிதாக எலுமிச்சை சாறு கலந்து திரியவிடவும்
  3. அடுப்பை அணைத்து விட்டு வெள்ளை துணியில் வடிகட்டவும்
  4. வடிகட்டியதை (பனீர்) தண்ணீர் விட்டு நன்றாக அலசி வெள்ளைத் துணியில் இறுக்க கட்டி தொங்க விடவும்
  5. பத்து நிமிடங்கள் கழித்து நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்
  6. கடாயில் நெய் மற்றும் 1/4 கப் பால் விட்டு உதிர்த்ததை சேர்த்து நன்றாக கிளறவும்
  7. சீனி சேர்த்து கிளறவும்
  8. சிறிது நிறம் மாறியவுடன் ஆற வைத்து மிக்ஸியில் ஒரு முறை திருப்பிக் கொள்ளவும்
  9. பின்னர் மீண்டும் கடாயில் மிக்ஸியில் திரித்ததை சிறிது சிறிதாக பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்தே செய்யவும்
  10. நன்றாக நிறம்(பிரவுன் கலர் வரவேண்டும்) மாறியதும் ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்
  11. கை பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடித்து சீனியில் பிரட்டி எடுக்கவும்
  12. பாரம்பரிய தார்வாத் பேடா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்