வீடு / சமையல் குறிப்பு / South Indian Mixture || Bakery Style

Photo of South Indian Mixture || Bakery Style by Aishwarya Rangan at BetterButter
971
6
0.0(5)
0

South Indian Mixture || Bakery Style

Nov-02-2018
Aishwarya Rangan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலை மாவு 1 கப்
  2. அரிசி மாவு 1/4 கப்
  3. பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
  4. தேவையான அளவு உப்பு
  5. சிவப்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  6. சமையல் எண்ணெய்
  7. வேர்க்கடலை - 1 கப்
  8. பொட்டுக்கடலை - 1 கப்
  9. அவள் போகா - 1 கப்
  10. பூண்டு - 10 பீஸ்
  11. கறிவேப்பிலை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும்
  2. அத்துடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயம் மற்றும் ஒரு ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூளை சேர்க்கவும்
  3. தேவையான அளவு தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்க்கவும் அதன் பின் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்
  4. பிசைந்து வைத்த மாவை சேர்த்து வட்டமாக பிழிந்து எடுக்கவும்...
  5. மீதமுள்ள மாவிற்கு ரிப்பன் பக்கோடா அல்லது ஸ்டார் முறுக்கு என எந்த அச்சில் வேணுமென்றாலும் உபயோகப்படுத்தலாம்...
  6. வேர்க்கடலை பொட்டுக்கடலை மற்றும் அவள் இவை அனைத்தையும் தனித்தனியாக பொரித்து எடுக்கவும்..
  7. இப்போது காராபூந்தி செய்வதற்கு ஒரு கப் கடலை மாவு கால் கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும்
  8. தேவையான அளவு உப்பு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து அத்துடன் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்க்கவும்
  9. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  10. கார பூந்தி கரண்டி அல்லது ஜெல்லி கரண்டியை உபயோகப்படுத்தி சூடாக போட்டு எடுக்கவும்
  11. பூண்டு பத்து பல் இடித்து வைத்துக் கொள்ளவும் பிறகு தனி பாத்திரத்தில் அதை சிறிது எண்ணை ஊற்றி வதக்கி எடுக்கவும்
  12. தேவையான அளவு கறிவேப்பிலையை சமையல் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  13. ஒரு பெரிய பாத்திரத்தில், செய்து வைத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்க்கவும்
  14. சிறிதளவு உப்பு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து கலக்கவும்...
  15. இப்போது சுவையான பேக்கரி ஸ்டைல் மிக்சர் தயார் இதை ஒரு டைட்டான பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

மதிப்பீடு (5)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rangan P
Nov-05-2018
Rangan P   Nov-05-2018

Arumai :smiley:

கிரிஜா. ரங்கன்
Nov-05-2018
கிரிஜா. ரங்கன்   Nov-05-2018

Very Nice Recipe..

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்