சேமியா சிக்கன் கெபாப் | Vermicelli chicken kebab in Tamil

எழுதியவர் tarannum malik  |  13th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Vermicelli chicken kebab by tarannum malik at BetterButter
சேமியா சிக்கன் கெபாப்tarannum malik
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

38

0

சேமியா சிக்கன் கெபாப் recipe

சேமியா சிக்கன் கெபாப் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vermicelli chicken kebab in Tamil )

  • சிக்கன் 500 கிராம்
  • ரீபைண்ட் மாவு 200 கிராம்
  • ஜூலியனாக வெட்டப்பட்ட கேரட் 1/2 கப்
  • பிரெஞ்ச் பீன்ஸ் 1/2 கப்
  • பச்சை குடமிளகாய் 1/2 கப்
  • இஞ்சிப்பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா பவுடர் 1/2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் பவுடர் 1 தேக்கரண்டி
  • எண்ணெய் 3 தேக்கரண்டி + பொரிப்பதற்கு
  • சேமியா மேலே பூசுவதற்கு
  • 1/2 கப் தண்ணீர்
  • சுவைக்கேற்ற உப்பு

சேமியா சிக்கன் கெபாப் செய்வது எப்படி | How to make Vermicelli chicken kebab in Tamil

  1. சிக்கனை 2 அல்லது 3 பல் பூண்டு 1/2 இன்ச் இஞ்சோடு தண்ணீர் முற்றிலுமாக உலரும்வரை கொதிக்கவிடவும்.
  2. சிக்கனை ஆறவிட்டு உதிர்த்துக்கொள்ளவும்.
  3. காய்கறிகளை அறைவேக்காடு செய்து எடுத்த வைக்கவும்.
  4. ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி மைதா சேர்த்து பச்சை வாடை போகும்வரை சமைக்கவும். தொடர்ந்து கலக்கிக்கொண்டே தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வேகவைக்கவும்.
  5. இந்த நிலையில் உதிர்த்த சிக்கனையும் வேகவைத்த காய்கறிகள், இஞ்சிப்பூண்டு விழுது, பச்சை மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், உப்பு ஆகியவற்றைச்சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  6. கலவையை ஆறவிட்டு வடைகளை உங்கள் உள்ளங்கைகளால் தட்டிக்கொள்ளவும்.
  7. சோமியாவை எடுத்த சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்.
  8. வடைகளை இந்த சேமியாவால் பூசி கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
  9. இப்போது ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வடைகளைப் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளவும்.
  10. பச்சை சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

தண்ணீர் சேர்க்கும் போது தொடர்ந்து கலக்கவும், அதிக், மாகத் தண்ணீர் சேர்க்கவேண்டாம். மேலும் கலவையை ஒன்றல்லது இரண்டு நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம்.

Reviews for Vermicelli chicken kebab in tamil (0)