Photo of Poha halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
425
0
0.0(0)
0

அவல் அல்வா

Nov-03-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் அல்வா செய்முறை பற்றி

தீபாவளிக்கு திருநெல்வேலி அல்வா தான் செய்ய வேண்டும் என்பதில்லை எளிமையான இந்த அவல் அல்வாவும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிவப்பு லேஸ் அவல் கால் கப்
  2. பால் முக்கால் கப்
  3. நெய் 1/8 கப்
  4. சீனி 1/3 கப்
  5. முந்திரி 6
  6. ஏலப் பொடி 4 சிட்டிகை
  7. கலர் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. பாதி அளவு பாலில் அவலை களைந்து ஊறவைக்கவும்
  2. கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. அதே கடாயில் ஊறவைத்த அவலை பாலோடு சேர்த்து கொதிக்கவிடவும்
  4. மீதமுள்ள பால் சேர்த்து கொதிக்க விடவும்
  5. கலர் சேர்க்கவும்
  6. பால் சிறிது வற்றி அவல் வெந்ததும் நன்றாக மசித்துக்கொள்ளவும்
  7. நெய் சேர்த்துக் கிளறவும்
  8. சீனி சேர்த்து கிளறவும்
  9. சுருண்டு அல்வா பதம் வந்தவுடன் வறுத்த முந்திரி ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்
  10. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்