வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton biryani by Reshma Babu at BetterButter
662
1
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Nov-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் அரை கிலோ
  2. சீரக சம்பா அரிசி அரை படி
  3. பெரிய வெங்காயம் ஐந்து
  4. தக்காளிப்பழம் 4
  5. பச்சை மிளகாய் 3
  6. மல்லி இலைகள் ஒரு பவுல்
  7. புதினா இலைகள் ஒரு பவுல்
  8. இஞ்சி பூண்டு விழுது 5 கரண்டி
  9. மிளகாய் பொடி 2 கரண்டி
  10. மல்லித் தூள் இரண்டு கரண்டி
  11. தயிர் 100
  12. எலுமிச்சம்பழம் 2
  13. பிரியாணி பொடி 5 டேபிள்ஸ்பூன்
  14. பட்ட அஞ்சு
  15. கிராம்பு ஐந்து
  16. ஏலக்காய் 5
  17. நெய் 200 கிராம்
  18. எண்ணெய் 100 கிராம்
  19. தண்ணீர் ஒரு படி

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்
  2. பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி மல்லி புதினா இலைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பிறகு மட்டனை போட்டு கிளறவும் அதில் உப்பு இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் மல்லி தூள் பிரியாணி மசாலா பொடி சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கறி நன்கு வேக விடவும்
  5. கறி நன்கு வெந்தவுடன் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  6. தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியை அதில் போட்டு வேகவிடவும்
  7. அரிசி முக்கால் பதம் வெந்தவுடன் பிரியாணியை 15 நிமிடம் தம்மில் போடவும்
  8. சுவையான சத்தான மட்டன் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்