வீடு / சமையல் குறிப்பு / ஏழு கறி கூட்டு

Photo of Seven vegetables kootu by Pavithra Prasad at BetterButter
408
0
0.0(0)
0

ஏழு கறி கூட்டு

Nov-03-2018
Pavithra Prasad
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஏழு கறி கூட்டு செய்முறை பற்றி

பொங்கல் , திருவாதிரை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காராமணி ஒரு சிறிய கப்
  2. துவரம் பருப்பு கால் கப்
  3. சேனைக்கிழங்கு சதுரமாக முறித்தது ஒரு சிறிய கப்
  4. சக்கரைவள்ளி கிழங்கு சதுரமாக முறித்தது சிறிய கப்
  5. அவரைக்காய் ஒரு சிறிய கப்
  6. பச்சைக்காய் ஒரு சிறிய கப்
  7. பரங்கிக்காய் சதுரத்தில் முறித்தது ஒரு சிறிய கப்
  8. பூசணிக்காய் சதுரத்தில் முடித்தது ஒரு சிறிய கப்
  9. தேங்காய் துருவியது ஒரு கப்
  10. மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
  11. சீரகம் அரை டீஸ்பூன்
  12. பச்சை மிளகாய் 3
  13. கடிது கடுகு தாளிக்க தேவையானவை
  14. சின்ன வெங்காயம் தாளிக்க தேவையானது
  15. வத்தல் மிளகாய் ஒன்று
  16. எண்ணெய் தேவையான அளவு
  17. தண்ணீர் 1/2 கப்
  18. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காராமணியையும் துவரம் பருப்பையும் ஒன்றாக சேர்த்து நன்றாக குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் எல்லா காய்கறிகளையும் போட்டு தண்ணீர் 1/2 கப் ஊற்றி உப்பு , மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்
  3. அதனுடன் வெந்தத காராமணியும் துவரம் பருப்பையும் சேர்க்கவும்
  4. மிக்ஸியில் தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் , பூண்டு மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  5. காய்கறிகள் வெந்தவுடன் தேங்காய் கலவையை சேர்க்கவும்
  6. பின்னர் சிறிய தீயில் வேக வைக்கவும்
  7. ஒரு சட்டியில் கடுகு , சின்ன வெங்காயம் , வத்தல் மிளகாய் தாளித்து இந்த கலவையில் சேர்க்கவும்
  8. சுவையான 7 கறி கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்