வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வடை

Photo of Potato vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
514
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு வடை

Nov-04-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு வடை செய்முறை பற்றி

எல்லா பண்டிகைகளுக்கும் வடை செய்வார்கள். எளிமையான இந்த உருளைக்கிழங்கு வடையை வரும் பண்டிகைக்கு செய்து பாருங்கள். ஒருவருக்கு இரண்டு வீதம் நான்கு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய உருளைக்கிழங்கு ஒன்று
  2. கடலை மாவு கால் கப்
  3. அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
  4. கான்ப்ளவர் ஒரு தேக்கரண்டி
  5. உப்பு அரை தேக்கரண்டி
  6. காரப் பொடி அரை தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  8. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  9. பச்சைமிளகாய் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  10. கருவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது
  11. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குக்கரில் நன்றாக குழைய வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்
  2. அதோடு கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களும் (எண்ணெய்த்தவிர) சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. சிறு சிறு வடையாகத் தட்டி கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்