பச்சை பிந்தி | Greens Sarvapindi in Tamil

எழுதியவர் Swapna Sunil  |  14th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Greens Sarvapindi by Swapna Sunil at BetterButter
பச்சை பிந்திSwapna Sunil
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

339

0

பச்சை பிந்தி recipe

பச்சை பிந்தி தேவையான பொருட்கள் ( Ingredients to make Greens Sarvapindi in Tamil )

 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • சுவைக்கேற்ற அளவு உப்பு
 • 2 தேக்கரண்டி: எள்ளு
 • 10ல் இருந்து 12 எண்ணி்க்கை: பச்சை மிளகாய் நசுக்கியது
 • கொஞ்சம் கறிவேப்பிலை நறுக்கியது
 • 1/2 கப்: கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
 • 1 கப் : பசலிக்கீரை
 • 1 கப் : பொடியாக நறுக்கிய வெங்காயம்
 • 2 கப்: தண்ணீர் + தேவையான அளவு
 • 3 கப் : அரிசி மாவு

பச்சை பிந்தி செய்வது எப்படி | How to make Greens Sarvapindi in Tamil

 1. ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டுப் பின்னர் அரிசி மாவைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 2. பின்னர் அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு கலவை கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
 3. இதைச் சில நிமிடங்கள் அறை வெப்பத்தில் ஆறவிடவும்.
 4. அடுத்து நறுக்கிய பசலிக்கீரை, வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, எள்ளு ஆகியவற்றைச் சேர்த்துத் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இந்த மென்மையான மாவாக பிசைந்துகொள்ளவும்.
 5. மூடி, 10 நிமிடம் மாவை விட்டுவைக்கவும்.. பின்னர் மாவை 12 சம பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும்.
 6. இப்போது மாவு உருண்டையை ஒரு கிரீஸ் செய்யப்பட்ட பாத்திரத்தில் ரொட்டி மொத்தத்தில் செய்து சில துளிகள் எண்ணெயை முனைகளில் விடவும்.. இதை மிதமானச் சூட்டில் இரண்டு பக்கங்களும் வேகம்வரையில், பொன்னிற புள்ளிகள் தோன்றும்வரையில் வறுக்கவும்.
 7. ஒரு தட்டில் எடுத்து இந்தச் செயல்முறையை அனைத்தும் சமைக்கப்படும்வரை மேற்கொள்ளவும்.
 8. தெலுங்கானவில் பிரசித்தம்பெற்ற சர்வபிந்தி தயில் அல்லது உங்களுக்குப் பிடித்த சட்னி எதனோடும் உண்பதற்குத் தயார்.
 9. எளிமையான அதே சமயம் திருப்திகரமான!!

எனது டிப்:

நசுக்கிய வறுத்த வேர்க்கடலையைக் கூடுதல் மொறுமொறுப்புக்கு சேர்க்கலாம், கேரட், சுரைக்காய் இன்னபிற போன்றவற்றையும் சேர்க்கலாம். மென்மையான மாவாகச் செய்துகொள்ளவேண்டாம், ஒட்டும், தட்டும்போது கடினமாக இருக்கும்... நீண்ட நேரம் வறுத்தால் கடினமாகிவிடும் என்பதால் நீண்டநேரம் வறுக்கவேண்டாம்...

Reviews for Greens Sarvapindi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.