வீடு / சமையல் குறிப்பு / பஞ்ஜாபி பின்னி

Photo of Punjabi pictures pinni by Krishnasamy Vidya Valli at BetterButter
402
0
0.0(0)
0

பஞ்ஜாபி பின்னி

Nov-04-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பஞ்ஜாபி பின்னி செய்முறை பற்றி

பஞ்சாப் மாநிலத்தின் பண்டிகை கால ரெசிபி இது. எளிமையான இந்த இனிப்பை தீபாவளிக்கு செய்து பாருங்கள். ஒருவருக்கு இரண்டு வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பஞ்சாபி
  • ஸ்டிர் ஃபிரை
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு கால் கப்
  2. நெய் கால் கப் +1 மேஜைக்கரண்டி
  3. கோவா 1/4 கப்
  4. பொடித்த சீனி கால் கப்
  5. பாதாம் முந்திரி கிஸ்மிஸ் தேங்காய் துருவல் தலா ஒரு மேஜைக்கரண்டி
  6. பால் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் தேங்காய் துருவலை ஈரப்பதம் போகும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்
  2. கடாயில் நெய் விட்டு கோதுமை மாவு சேர்த்து வறுக்கவும்
  3. நன்றாக நிறம் மாறியதும் கோவா சேர்த்து வதக்கவும்
  4. சீனி சேர்த்து கிளறவும்
  5. பாதாம் முந்திரி கிஸ்மிஸ் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்
  6. பால் 2 மேஜைக்கரண்டி விட்டு சுருள கிளறி இறக்கவும்
  7. கை பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்