வீடு / சமையல் குறிப்பு / இமாச்சல் பிரதேசம் ஜிலேபி

Photo of Himachal pradesh jilebi by Krishnasamy Vidya Valli at BetterButter
488
0
0.0(0)
0

இமாச்சல் பிரதேசம் ஜிலேபி

Nov-04-2018
Krishnasamy Vidya Valli
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

இமாச்சல் பிரதேசம் ஜிலேபி செய்முறை பற்றி

இமாச்சல பிரதேசத்தின் பண்டிகை கால இனிப்பு வகை இது. நேரம் கூடுதல் எடுத்தாலும் இதன் சுவையே அலாதி தான். வரும் தீபாவளி பண்டிகைக்கு செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஹிமாச்சல
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. மைதா மாவு அரை கப்
  2. கடலை மாவு ஒரு மேசைக்கரண்டி
  3. தயிர் 1 மேஜைக்கரண்டி
  4. கலர் 2 சிட்டிகை
  5. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  6. சீனி அரை கப்
  7. ஏலப்பொடி 4 சிட்டிகை
  8. குங்குமப்பூ சிறிது
  9. எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
  10. பாதாம் பிஸ்தா அலங்கரிக்க தேவையானவை

வழிமுறைகள்

  1. மைதா மாவு கடலை மாவு தயிர் மற்றும் கலர் சேர்த்து கரைத்து (தோசைமாவு பதம்) நான்கு முதல் ஆறு மணிநேரம் வரைஊற வைக்கவும்
  2. சீனி அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  3. ஒரு கம்பி பதம் வந்தவுடன் குங்குமப்பூ எலுமிச்சை சாறு மற்றும் ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை ஜிலேபி பாட்டிலில் விட்டு சூடு எண்ணெயில் நேரடியாக பிழியவும்
  5. நன்றாக பொரிந்ததும் செய்து வைத்த ஜீரா பாகில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுக்கவும்
  6. பாதாம் முந்திரி அலங்கரித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்