வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சீக் கெபாப்

Photo of Veg seekh kebab by Raihanathus Sahdhiyya at BetterButter
400
1
0.0(0)
0

வெஜ் சீக் கெபாப்

Nov-05-2018
Raihanathus Sahdhiyya
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சீக் கெபாப் செய்முறை பற்றி

பண்டிகைக் கால பார்ட்டிகளில் செய்து அசத்திட அருமையான ஸ்டார்டர் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • முகலாய்
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • கிரில்லிங்
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. காய்கறிக் கலவை செய்ய:
  2. கேரட்: 1 கப் துருவியது
  3. முட்டை கோஸ் : 1/2 கப் துருவிய
  4. பீட்ரூட் : 1/4 கப் துருவியது
  5. அவித்த பட்டாணி: 1/2 கப்
  6. பீன்ஸ்: 1/4 கப் பொடியாக நறுக்கியது
  7. எண்ணெய் : 2 தேக்கரண்டி
  8. சீரகம் : 1 தேக்கரண்டி
  9. மல்லி புதினா : 1 கப்
  10. கெபாப் செய்ய :
  11. செய்து வைத்த காய்கறிக் கலவை
  12. அவித்து மசித்த உருளைக்கிழங்கு: 2
  13. இஞ்சிபூண்டு விழுது: 1 மேசைக்கரண்டி
  14. நறுக்கிய பச்சை மிளகாய்: 2
  15. எலுமிச்சைச்சாறு: 1 தேக்கரண்டி
  16. உப்பு : தேவைக்கேற்ப
  17. மிளகாய்த்தூள்: 1 1/2 தேக்கரண்டி
  18. மல்லித்தூள் : 1/2 தேக்கரண்டி
  19. சீரகத்தூள் : 1/2 தேக்கரண்டி
  20. கரம் மசாலா தூள் : 1/2 தேக்கரண்டி
  21. சாட் மசாலா தூள் : 1/4 தேக்கரண்டி
  22. பொட்டுக்கடலை மாவு : 1/4 கப்
  23. பிரட் தூள் : 1/4 கப்
  24. நெய் : வறுக்க

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்
  2. பிறகு துருவிய கேரட், கோஸ், பீட்ரூட், நறுக்கிய பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து பின் அவித்த பட்டாணியை சேர்த்துவிட்டு 2 நிமிடம் ஈரப்பதம் போகும் வரை வதக்கவும்
  3. வதக்கிய காய்கறிக் கலவையை ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
  4. கெபாப் செய்ய குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக பிசையவும். தேவைப்பட்டால் சிறிது பொட்டுக்கடலை மாவு அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்
  5. ஒரு பந்து அளவு உருண்டை எடுத்து கைகளால் நீள வாக்கில் உருட்டிக் கொள்ளவும்
  6. பிறகு உருட்டிய கலவையை ஒரு மரக் குச்சி (சீக்) அல்லது பணியாரம் திருப்பும் ஊசியில் செருகி விடவும்
  7. கையில் சிறிது நீர் தொட்டு அதை நன்றாக அழுத்தி நீளமாக்கவும். இரு முனைகளிலும் சிறிது அழுத்தம் கொடுக்கவும்.
  8. ஒரு தவாவில் சிறிது நெய் விட்டு,அதிக தீயில் கெபாப் குச்சிகளை வைத்து வேகவிடவும். 30 வினாடிகள் கழித்து அடுத்த பக்கம் திருப்பி வேக வைக்கவும். இவ்வாறு அனைத்து பக்கங்களும் வெந்த பின் அடுப்பிலிருந்து எடுக்கவும்.
  9. சூடாக மல்லிப்புதினா சட்னி உடன் பரிமாறவும். பண்டிகைக்கால பார்ட்டிகளில் பரிமாற அசத்தலான ஸ்டார்ட்டர் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்