வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பயிறு கருவேப்பிலை சுண்டல்

Photo of Green gram curry leaves sundal by Krishnasamy Vidya Valli at BetterButter
330
0
0.0(0)
0

பச்சைப்பயிறு கருவேப்பிலை சுண்டல்

Nov-05-2018
Krishnasamy Vidya Valli
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பயிறு கருவேப்பிலை சுண்டல் செய்முறை பற்றி

நவராத்திரியில் பச்சை பயிறை எப்பொழுதும் இனிப்பு சுண்டல் தான் செய்வார்கள் .இது சிறிது வித்தியாசமாக கருவேப்பிலையை பொடி செய்து சேர்த்து செய்யும் கார சுண்டல். நவராத்திரி பண்டிகைக்கு மட்டுமல்லாமல் மாலையில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போன்றும் செய்து கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பச்சைக் பயறு 1/4 கப்
  2. உப்பு கால் தேக்கரண்டி
  3. தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  4. வறுத்து பொடி செய்ய தேவையானவை
  5. கருவேப்பிலை 4 ஆர்க்கு
  6. உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  7. கட்டி பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  8. மிளகாய் வத்தல் 1 அல்லது 2
  9. தேங்காய் எண்ணெய் 2 டிராப்ஸ்
  10. தாளிக்க தேவையானவை
  11. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  12. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  13. பெருங்காயம் 2 சிட்டிகை
  14. மிளகாய்வற்றல் 1
  15. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் பச்சை பயறை வறுத்து தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. குக்கரில் அளவாக தண்ணீர் வைத்து குழையாமல் வேக வைத்து எடுக்கவும்
  3. வறுத்து பொடி செய்ய கொடுத்தவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  5. வேகவைத்த பயறு சேர்த்து வதக்கவும்
  6. உப்பு தேங்காய் துருவல் வறுத்து பொடித்த பொடி சேர்த்துக் கிளறவும்
  7. சுவையான சுண்டல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்