வீடு / சமையல் குறிப்பு / காஜூ பிஸ்தா ரோல் & கீரின் ஆப்பிள்

Photo of Kaju pista roll & Green apple by pavumidha arif at BetterButter
677
1
0.0(0)
0

காஜூ பிஸ்தா ரோல் & கீரின் ஆப்பிள்

Nov-05-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காஜூ பிஸ்தா ரோல் & கீரின் ஆப்பிள் செய்முறை பற்றி

சுவையான மற்றும் உலர் பழம் நிறைந்த ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முந்திரி மாவு செய்ய::
  2. முந்திரி பருப்பு 1 கப்
  3. சக்கரை 1/2 கப்
  4. தண்ணீர் 1/4 கப்
  5. ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
  6. பிஸ்தா மாவு செய்ய:::
  7. பிஸ்தா 1/2 கப்
  8. பவுடர் சக்கரை 1/4 கப்
  9. பால் 4 டீஸ்பூன்
  10. நெய் தேவையான அளவு
  11. சக்கரை 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் முந்திரி பருப்பை லேசாக வறுத்து அரைத்து கொள்ளவும்
  2. பின்னர் கடாயில் தண்ணீர் ஊற்றி சக்கரை சேர்த்து பாகு காய வைக்கவும்.ஒரு கம்பி பாகு வந்த பின் பருப்பு பொடி சேர்த்து கிளறவும்
  3. இடைவிடாது கிளறவும். கெட்டி பதம் வந்த பின் ஏலக்காய் தூள் மற்றும் 3 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்
  4. இப்போது ஓரங்களில் விடும் .இப்பதத்தில் பட்டர் பேப்பர் அல்லது பாலிதீன் கபர் அல்லது நெய் தடவிய தட்டில் போட்டு ஆற விடவும்
  5. பிஸ்தா செய்ய:::
  6. பிஸ்தாவினை லேசாக வறுத்து அரைத்து கொள்ளவும்.இதனுடன் பவுடர் சக்கரை சேர்த்து கொள்ளவும்
  7. பின்னர் இதில் சிறிது பால் மற்றும் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு உருட்டி வைக்கவும்
  8. இப்போது முந்திரி மற்றும் பிஸ்தா கலவை தயார்
  9. முந்திரி பருப்பை பரத்தி கொள்ளவும்.பிஸ்தாவினை இரண்டாக பிரித்து உருட்டி வைத்து கொள்ளவும்
  10. பின்னர் முந்திரி பருப்பை நடுவில் நேராக வெட்டி கொள்ளவும்.முந்திரி பருப்பிற்கு மேல் பிஸ்தாவை வைத்து உருட்டி கொள்ளவும்.
  11. இப்போது சமமாக வெட்டி எடுத்து கொண்டால் சுவையான காஜூ பிஸ்தா ரோல் தயார்.
  12. கீரின் ஆப்பிள் செய்ய:::
  13. உருட்டி வெட்டிய துண்டில் உருண்டைகளாக செய்தால் கீரின் பிஸ்தா ஆப்பிள் தயார்.
  14. சுவையான காஜூ பிஸ்தா ரோல் மற்றும் கீரின் ஆப்பிள் சூவீட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்