மட்டன் ரோஹன் ஜோஷ் | Mutton Roganjosh in Tamil

எழுதியவர் Asiya Omar  |  5th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mutton Roganjosh by Asiya Omar at BetterButter
மட்டன் ரோஹன் ஜோஷ்Asiya Omar
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

3

0

மட்டன் ரோஹன் ஜோஷ் recipe

மட்டன் ரோஹன் ஜோஷ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutton Roganjosh in Tamil )

 • ஆட்டுக்கறி -1/2 கிலோ
 • எண்ணெய் -3 மேஜைக்கரண்டி
 • நெய் -1 மேஜைக்கரண்டி
 • பெரிய வெங்காயம் -3
 • அரைத்த தக்காளி -2
 • இஞ்சி பூண்டு விழுது -1 +2 தேக்கரண்டி
 • மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
 • மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
 • சீரகப்பொடி -1 தேக்கரண்டி
 • தயிர் -1 மேஜைக்கரண்டி
 • ஏலம்,பட்டை கிராம்புத்தூள் -1/2 தேக்கரண்டி அல்லது முழுதாக தலா 2 துண்டு.
 • நறுக்கிய மல்லி இலை - சிறிது.
 • உப்பு - தேவைக்கு.

மட்டன் ரோஹன் ஜோஷ் செய்வது எப்படி | How to make Mutton Roganjosh in Tamil

 1. முதலில் ஆட்டுக்கறியை நந்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும். கறியுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு,ஒரு மேஜைக்கரண்டி தயிர்,சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
 2. குக்கரில் எண்ணெய் விட்டு ஏலம்,பட்டை கிராம்பு போடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்முறுகலாக வதக்கவும்.இஞ்சி பூண்டு இரண்டு தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.கரம் மசாலா பொடியாக சேர்ப்பதாய் இருந்தால் இஞ்சி பூண்டு சேர்த்து பின்பு சேர்க்கவும்.
 3. மிளகாய்த்தூள்,மல்லி,சீரகத்தூள் சேர்க்கவும்.பிரட்டவும்.2 தக்காளி அரைத்து சேர்க்கவும்.
 4. நன்கு வதக்கவும். ஊற வைத்த கறியைச் சேர்க்கவும்.உப்பு சிறிது சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வேக வைக்கவும்.
 5. ஆவியடங்கிய பின் திறந்து ஒரு கடாயில் மாற்றி கிரேவி அதிகம் இருந்தால் சிறிது கெட்டியாக விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.எண்ணெய் மேலே வரும். நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்
 6. சுவையான மட்டன் ரோஹன் ஜோஷ் தயார்.பவுலில் எடுத்து பரிமாறவும்.
 7. காலை அல்லது இரவு நேர டிபனோடு அல்லது மதியம் பிரியாணியோடும் பரிமாறலாம்

எனது டிப்:

காரம் அவரவர் விருப்பம்..காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்தால் நிறம் சூப்பராக இருக்கும்.கரம் மசாலா பொடியும் சிறிதுசேர்க்கலாம்

Reviews for Mutton Roganjosh in tamil (0)