ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி | Hyderabad Mutton Dum Briyani in Tamil

எழுதியவர் Asiya Omar  |  5th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Hyderabad Mutton Dum Briyani by Asiya Omar at BetterButter
ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணிAsiya Omar
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2

0

ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி recipe

ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Hyderabad Mutton Dum Briyani in Tamil )

 • ஆட்டு இறைச்சி - 1/2 கிலோ
 • பாசுமதி அரிசி -1/2 கிலோ
 • அரைக்க:-
 • (இஞ்சி 3 இஞ்ச் துண்டு
 • பூண்டு -15 பல்
 • பச்சை மிளகாய் -6)
 • தயிர் - 1 கப்
 • மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
 • கரம் மசாலா -1 தேக்கரண்டி
 • உப்பு - தேவைக்கு.
 • தாளிக்க:-
 • எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
 • நெய் - 4 மேஜைக்கரண்டி
 • ஏலம் -4
 • பட்டை-3 துண்டு
 • கிராம்பு -4
 • பிரியாணி இலை -2
 • பெரிய வெங்காயம் - 3 ( 1/4 கிலோ)
 • புதினா - அரை கட்டு
 • மல்லி - அரை கட்டு
 • சிறிய எலுமிச்சை பழம் -1.
 • ஆரஞ்சு ரெட் கலர் -1 துளி
 • லெமன் எல்லோ கலர் - 1 துளி

ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி செய்வது எப்படி | How to make Hyderabad Mutton Dum Briyani in Tamil

 1. மட்டன் சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும். மட்டன் ஒரு துண்டு 50 கிராம் அளவு இருக்கும் படி கட் செய்து வாங்கவும். வேண்டும்.பிரியாணியில் கறித்துண்டு பெரிதாக இருக்க வேண்டும்.
 2. அரிசி நன்கு அலசி அரை மணி நேரம் ஊற விட வேண்டும்.பெரிய வெங்காயம் நீள் வாக்கில் நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு ஆகியவற்றை நைசாக அரைக்கவும்.
 3. கறியுடன் அரைத்த விழுது, மிளகாய்ப்பொடி,கரம் மசாலாப் பொடி,தயிர்,உப்பு சேர்த்து அரை மணி ஊற வைக்கவும். குக்கரில் 2 மே.கரண்டி நெய் விட்டு சூடாக்கி ஊற வைத்த கறியை 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
 4. ஒரு அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் நெய் விட்டு,ஏலம் பட்டை ,கிராம்பு,பிரியாணி இலை,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நறுக்கிய புதினா சேர்க்கவும்.நன்கு வதங்கிய பின்பு வேக வைத்த கறியைச் சேர்க்கவும்,நறுக்கிய மல்லி இலை சேர்த்து மூடி அடுப்பைக் குறைத்து வைக்கவும்.உப்பு,புளிப்பு சரி பார்க்கவும்.
 5. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் விட்டு உப்பு சரியாக போடவும்,1 தேக்கரண்டி எண்ணெய் விடவும். அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாது.ஒன்றொன்றாக அரிசி இருக்குமாறு முக்கால் பதத்தில் வடிக்கவும்.
 6. பிரியாணிக்கு கறி சிறிது கிரேவியுடன் இருக்கும்,தயாரான பாத்திரத்தில் முக்கால் பதத்தில் வடித்த அரிசியைத் தட்டி பரத்தவும்.சிறிய எலுமிச்சை பிழியவும்.
 7. நறுக்கிய மல்லி ,புதினா சிறிது சேர்க்கவும்.ஆரஞ்சு ரெட் கலர் ஒரு துளி கரைத்து தெளித்து விடவும்.விரும்பினால் சாப்ரான் சிறிது பாலில் கரைத்து தெளிக்கவும் சாப்ரான் இல்லையென்றால் லெமன் எல்லோ கலர் சிறு துளி சேர்த்து தெளிக்கவும்.
 8. சிக்கென்று மூடி 15 -20 நிமிடம் மிகச் சிறு தீயில் தம் போடவும்.அடியில் பழைய தவா வைத்தால் அடி பிடிக்காது.
 9. தம் ஆகி 15 நிமிடம் கழித்து திறந்து கவனமாக பிரட்டி எடுத்து விரும்பினால் பொரித்த வெங்காயம் மேலே தூவி பக்க உணவுகளுடன் பரிமாறவும்.

எனது டிப்:

காரம் அவரவர் விருப்பம்,தக்காளி சேர்க்கவில்லை. வடித்து தட்டாமல் அரிசி அளவிற்கு ஒன்னரை அளவுதண்ணீர் வைத்து செய்யலாம்.

Reviews for Hyderabad Mutton Dum Briyani in tamil (0)