ஷாகி துக்டா | Shahi Tukda in Tamil

எழுதியவர் Asiya Omar  |  6th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Shahi Tukda recipe in Tamil,ஷாகி துக்டா, Asiya Omar
ஷாகி துக்டாAsiya Omar
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  மணிநேரம்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

1

0

ஷாகி துக்டா recipe

ஷாகி துக்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Shahi Tukda in Tamil )

 • பெரிய ப்ரெட் துண்டுகள் -12
 • பால் -2 லிட்டர்
 • கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்( 400 கிராம் டின்)
 • சாப்ரான் -2 பின்ச்
 • ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
 • நெய் - 3 மேஜைக்கரண்டி
 • ஊற வைத்து நறுக்கிய பாதாம்,பிஸ்தா - தலா 2 மேஜைக்கரண்டி

ஷாகி துக்டா செய்வது எப்படி | How to make Shahi Tukda in Tamil

 1. முதலில் ப்ரெட் ஓரம் வெட்டி அகற்றி விடவும்.முக்கோணமாக துண்டு போடவும்.
 2. ஒரு கடாயில் சிறிது சிறிதாக நெய் ப்ரெட்டில் தடவி மீடியம் நெருப்பில் டோஸ்ட் செய்து எடுக்கவும். அதனை அகலமான பவுலில் அடுக்கி வைக்கவும்
 3. பால் சாப்ரான்,ஏலப்பொடி போட்டு காய்ச்சவும்.
 4. பால் மூன்றில் ஒரு பகுதியாக வற்றி வர வேண்டும்.அடி பிடிக்காமல் சிம்மில் வைத்து காய்ச்சவும். மில்க் மெயிட் சேர்த்து கலந்து விடவும்.
 5. இனி ஊற வைத்த பாதாம் தோல் எடுத்து நீள் வாக்கில் நறுக்கி லேசாக நெய்யில் வறுத்து எடுக்கவும்.
 6. பிஸ்தாவை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.நான் ரெடிமேடாக பிஸ்தா ப்லேக்ஸ் வாங்கியது இருந்தது.அதனை உபயோகித்தேன்.
 7. வற்றிய பாலை ப்ரெட் டோஸ்ட் அடுக்கிய தட்டு அல்லது பவுலில் மேலே விடவும்.
 8. அதன் மேல் வறுத்த பாதாம் தூவவும்.
 9. பாதாம் ப்லேக்ஸ் அனைத்து துண்டுகள் மீதும் தூவ வேண்டும்
 10. அடுத்து பிஸ்தா தூவி விடவும்
 11. ப்ரிட்ஜில் எடுத்து வைக்கவும் சில்லென்றே அல்லது வெது வெதுப்பாகவும் பரிமாறலாம்
 12. சுவையான ஷாகி துக்டா தயார்.பண்டிகைக்காலம் ஏற்பாடு செய்யும் பார்ட்டிகளில் பரிமாறலாம்.இரண்டு ஸ்லைஸ் ஆக எடுத்து சாசர் ப்லேட் அல்லது பவுலில் பரிமாறவும்.

எனது டிப்:

நெய் உங்கள் விருப்பம் போல் சேர்த்து டோஸ்ட் செய்யலாம்.கண்டென்ஸ்ட் மில்க் பதில் சுவைக்கு சீனியும் சேர்க்கலாம்.

Reviews for Shahi Tukda in tamil (0)