வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton  Biriyani by Sumaiya shafi at BetterButter
294
2
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Nov-06-2018
Sumaiya shafi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

மட்டன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஹைதராபாத்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் ஒரு கிலோ
  2. நெய் மற்றும் எண்ணெய் 200 கிராம்
  3. ஏலக்காய் 4 துண்டு
  4. பட்டை 1 துண்டு
  5. லவங்கம் 5 துண்டு
  6. பிரியாணி இலை இரண்டு
  7. ஜாதிபத்திரி ஒன்று
  8. ஸ்டார்-1
  9. வெங்காயம் 6
  10. தக்காளி-2
  11. மல்லி இலை ஒரு கட்டு சிறியது
  12. புதினா இலை அரை கட்டு
  13. பச்சை மிளகாய் 8 முதல் 10 வரை
  14. தயிர் 100 கிராம்
  15. சிவப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  16. லெமன் 1
  17. கலர் பொடி சிறிதளவு விருப்பப்பட்டால்
  18. பிரியாணி மசாலா 2 டீஸ்பூன்
  19. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் எண்ணெய் மற்றும் நெய்யை குக்கரில் ஊற்றவும்
  2. பின் அதில் ஏலக்காய் ,பட்டை, லவங்கம் ,பிரியாணி இலை,நட்சத்திர சோம்பு,ஜாதிக்காய் சேர்க்கவும்
  3. வெங்காயத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் கிளறி விடவும்
  5. பின் அதில் தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
  6. பிறகு அதில் மல்லி இலை, புதினா இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  7. எல்லாவற்றையும் நன்கு கிளறி விடவும்
  8. அரை மணி நேரத்திற்கு முன்பே மட்டனில் தயிர் ,இஞ்சி பூண்டு விழுது, உப்பு,சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
  9. அதை குக்கரில் போட்டு கிளறி விடவும்
  10. தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் 6 முதல் 8 விசில் வரை போட வேண்டும்.
  11. சோற்றை தனியாக முக்கால் பதம் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்
  12. குக்கரை திறந்து முக்கால் பாகம் வெந்த சோற்றை அதில் சேர்த்து தம் பண்ணவும்
  13. கடைசியாக லெமன் ஜூஸ் கலர் பொடி கலந்து ஊற்றி வைக்கவும்
  14. பின் பொரித்த வெங்காயத்தை அதன்மேல் சேர்த்து ஒரு 5 முதல் 10 நிமிடம் வரை தம் பண்ணி பரிமாறவும்
  15. ஒரு இருபது நிமிடம் அதை தம் செய்து பிறகு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்