மட்டன் சாப்ஸ் கப்சா ரைஸ் | Mutton chops kabsa rice in Tamil

எழுதியவர் Asiya Omar  |  6th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Mutton chops kabsa rice recipe in Tamil,மட்டன் சாப்ஸ் கப்சா ரைஸ், Asiya Omar
மட்டன் சாப்ஸ் கப்சா ரைஸ்Asiya Omar
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1

0

மட்டன் சாப்ஸ் கப்சா ரைஸ் recipe

மட்டன் சாப்ஸ் கப்சா ரைஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutton chops kabsa rice in Tamil )

 • மட்டன் சாப்ஸ் செய்ய:-
 • ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள்-400- 500 கிராம்
 • வெங்காயம் -1
 • தக்காளி -1
 • இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
 • கரம் மசாலா( ஏலம் பட்டை கிராம்பு தூள்)-1/4 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
 • மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
 • உப்பு தேவைக்கு
 • மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
 • முட்டை -2
 • எண்ணெய் நெய் -2 மேஜைக்கரண்டி
 • நறுக்கிய மல்லி இலை சிறிது.
 • கப்ஸா ரைஸ் செய்ய :-
 • பாசுமதி அரிசி - 400 கிராம்
 • ஆலிவ் ஆயில் அல்லது நெய்-2 மேஜைக்கரண்டி
 • நறுக்கிய பெரிய வெங்காயம் -1
 • தண்ணீர் - அரிசி ஒன்னரை அளவு
 • நார் கப்ஸா மிக்ஸ் -1 பாக்கெட்
 • அல்லது சூப் கியூப் -1
 • சாப்ஸ் கறி வேக வைத்த தண்ணீர் - சிறிது
 • நறுக்கிய மல்லி,புதினா சிறிது.
 • உப்பு மிக்சில் இருக்கும் பார்த்து சேர்க்கவும்.

மட்டன் சாப்ஸ் கப்சா ரைஸ் செய்வது எப்படி | How to make Mutton chops kabsa rice in Tamil

 1. முதலில் கறி சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்து எடுத்து வைக்கவும்.
 2. குக்கரில் கறியுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய்த்தூள்,மஞ்சள்,கரம் மசாலா,உப்பு தேவைக்கு தண்ணீர் சிறிது சேர்த்து 5 விசில் வேக வைக்கவும்.
 3. ஆவியடங்கியவுடன் தண்ணீர் சிறிது வடித்து எடுத்து விட்டு பிரட்டிக் கொள்ளவும்.அதனை ப்லேடில் எடுத்து ஆற வைக்கவும்.
 4. முட்டையை உப்பு மிளகு சேர்த்து அடித்து வைக்கவும்.
 5. வேகவைத்த சாப்ஸ் கறியை முட்டையில் முக்கி தவாவில் எண்ணெய் நெய் கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து இருபுறமும் திருப்பி போடவும்.
 6. எடுத்து ப்லேட்டில் மல்லி இலை தூவி வைக்கவும்.
 7. இனி கப்ஸா ரைஸ் செய்ய அரிசியை அரை மணி நேரம் ஊற விட்டு தண்ணீர் வடித்து வைக்கவும்.
 8. குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 9. தண்ணீர் அளந்து சேர்க்கவும். கறி வெந்த தண்ணீர் சேர்க்கவும். அதில் கப்ஸா மிக்ஸ் சேர்க்கவும். கப்ஸா மிக்ஸ் இல்லை என்றால் நார் அல்லது மேகி சூப் கியூப் மும் கூட சேர்த்து செய்யலாம்.சாப்ஸ் கறி வெந்த தண்ணீர் சேர்ப்பதால் அருமையாக இருக்கும்.
 10. கலந்து கொதிக்க விடவும்.
 11. ஊற வைத்து வடிகட்டிய அரிசி சேர்க்கவும்.
 12. உப்பு சரி பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரவும் அடுப்பை குறைத்து 5 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.
 13. ஆவியடங்கியவுடன் திறக்கவும்.இப்படி கப்ஸா ரைஸ் சூப்பராக இருக்கு.
 14. பக்குவமாக பிரட்டி விடவும்.
 15. ப்லேட்டில் கப்ஸா ரைஸ், மட்டன் சாப்ஸ் ப்ரை வைத்து மல்லி புதினா அலங்கரித்து வெங்காய பச்சடியுடன் பரிமாறவும்.
 16. சுவையான மட்டன் சாப்ஸ் கப்ஸா தயார்.

எனது டிப்:

கப்ஸா மிக்ஸ் சேர்க்காமல் கறி வெந்த தண்ணீர் சேர்த்து சூப் கியூப் சேர்த்து செய்தாலே செமையாக இருக்கும்

Reviews for Mutton chops kabsa rice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.