வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கட்லெட்

Photo of Chicken Cutlet by Sumaiya shafi at BetterButter
170
0
0.0(0)
0

சிக்கன் கட்லெட்

Nov-06-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கட்லெட் செய்முறை பற்றி

சிக்கன் கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் 250 கிராம்
  2. உருளைக்கிழங்கு 3
  3. கேரட் 1
  4. மல்லி இலை சிறிதளவு
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  7. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  8. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  10. மஞ்சள் அரை டீஸ்பூன்
  11. பிரெட் தூள் ஒரு கப்
  12. முட்டை-2
  13. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனை இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. பின் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை தனியாக வேக வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு தவாவில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த சிக்கனை சிறிய துண்டுகளாகவோ அல்லது அரைத்து அதில் சேர்க்கவும்
  5. பின் அதில் சிவப்பு மிளகாய் தூள், மிளகு தூள்,உப்பு, கரம் மசாலா தூள் எல்லாவற்றையும் சேர்த்து கிளறவும்.
  6. கடைசியாக வேக வைத்த உருளைக்கிழங்கு ,கேரட் மற்றும் மல்லி இலை சேர்த்து இறக்கவும்
  7. கொஞ்சம் சூடு ஆறிய பிறகு கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
  8. பிசைந்த மாவை கட்லெட் வடிவில் தட்டி முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்
  9. இப்படி எல்லாவற்றையும் செய்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்
  10. பின் தவாவில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்
  11. சுவையான சிக்கன் கட்லட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்