வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டனட் ரவா வடை

Photo of Instant Rava vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
288
0
0.0(0)
0

இன்ஸ்டனட் ரவா வடை

Nov-06-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டனட் ரவா வடை செய்முறை பற்றி

எல்லோருக்கும் உளுந்து வடை மிகவும் பிடிக்கும். ஆனால் அது சரியாக வராமல் அதிகமானவர்கள் அவதிபடுவார்கள். உளுந்து வடை போலவே வெளியில் முறுமுறு என்றும் உள்ளே சாஃப்ட்டாகவும் இருக்கும் இந்த வடை நல்ல அருமையான சுவையுடன் இருக்கும். இந்த வடை தட்டுவது மிகவும் எளிது. வரும் பண்டிகைக்கு செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ரவை கால் கப்
  2. தயிர் 1/8 கப்+1 மேஜைக்கரண்டி
  3. அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
  4. உப்பு கால் தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் ஒன்று பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  6. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  7. கருவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  8. சீரகம் கால் தேக்கரண்டி
  9. பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
  10. மிளகு கால் தேக்கரண்டி (ஒன்று இரண்டாக தட்டி சேர்க்கவும்)
  11. பெருங்காயம் 2 சிட்டிகை
  12. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. எண்ணெய்த்தவிர கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  2. எல்லாம் சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக வடை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி உளுந்து வடை போன்று தட்டி கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்