வீடு / சமையல் குறிப்பு / ஈசி தீபாவளி இஞ்சி லேகியம்

Photo of Easy Diwali inji legiyam by Krishnasamy Vidya Valli at BetterButter
988
0
0.0(0)
0

ஈசி தீபாவளி இஞ்சி லேகியம்

Nov-06-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈசி தீபாவளி இஞ்சி லேகியம் செய்முறை பற்றி

தீபாவளி பண்டிகைக்கு எல்லோர் வீட்டிலும் செய்யப்படுவது இஞ்சி லேகியம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் செய்வார்கள். இது என் அம்மா செய்யும் எளிய முறை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொடியாக நறுக்கிய இஞ்சி கால் கப்
  2. கொத்தமல்லி விதை ஒரு மேஜைக்கரண்டி
  3. சீரகம் ஒரு மேசைக்கரண்டி
  4. நெய் ஒரு மேசைக்கரண்டி
  5. வெல்லம் 1/8 கப் + 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி விதை மற்றும் சீரகத்தை 10 நிமிடம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்
  2. தண்ணீர் வடித்து விட்டு இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  3. கடாயில் வெல்லம் போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. விருப்பப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்
  5. நன்றாக பச்சை வாசனை போனவுடன் அரைத்ததை சேர்த்து கிளறவும்
  6. நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கவும்
  7. சுவையான தீபாவளி இஞ்சி லேகியம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்