வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு கார கொழுக்கட்டை

Photo of Rice flour Kara kozhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
1007
0
0.0(0)
0

அரிசி மாவு கார கொழுக்கட்டை

Nov-06-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு கார கொழுக்கட்டை செய்முறை பற்றி

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு எல்லாமே இனிப்பு கொழுக்கட்டையாக செய்யாமல் ஒன்று அல்லது இரண்டு காரகொழுக்கட்டையும் செய்வார்கள். அதில் ஒரு வகை இது. ஒருவருக்கு இரண்டு வீதம் நான்கு நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஈர அரிசி திரித்தது/ கொழுக்கட்டை மாவு/ இடியாப்ப மாவு அரை கப்
  2. வெந்நீர் 3/4 கப்
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. தேங்காய் எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  5. தாளிக்க தேவையானவை
  6. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  7. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  8. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  9. காரப்பொடி 3/4 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. மாவு உப்பு எண்ணெய் வெந்நீர் சேர்த்து நன்றாக கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்க்கவும்
  3. மீண்டும் நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  4. ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  5. சுவையான அரிசிமாவு கார கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்