வீடு / சமையல் குறிப்பு / கடலை பருப்பு பூரண கொழுக்கட்டை

Photo of Kadalai paruppu pooran kozhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
563
0
0.0(0)
0

கடலை பருப்பு பூரண கொழுக்கட்டை

Nov-07-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை பருப்பு பூரண கொழுக்கட்டை செய்முறை பற்றி

விநாயகர் சதுர்த்திக்கு தேங்காய் கொழுக்கட்டைக்கு அடுத்தபடியாக செய்யும் முக்கியமான கொழுக்கட்டை வெரைட்டி இது. ஒருவருக்கு 2 வீதம் நான்கு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஈர அரிசி திரித்தது /கொழுக்கட்டை மாவு/ இடியாப்ப மாவு 1/3 கப்
  2. வெந்நீர் 1/3 கப்+ 2 மேசைக்கரண்டி
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. எண்ணெய் அரை தேக்கரண்டி
  5. பூரணத்திற்கு தேவையானவை
  6. கடலைப்பருப்பு கால் கப்
  7. தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
  8. வெல்லம் கால் கப்
  9. நெய் ஒரு தேக்கரண்டி
  10. ஏலப்பொடி 3 சிட்டிகை

வழிமுறைகள்

  1. மாவை வெந்நீர் உப்பு எண்ணெய் சேர்த்து நன்றாக கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  2. கடலைப்பருப்பை வெறும் கடாயில் வறுத்து குக்கரில் பருப்பை வேகவைத்து மிக்ஸியில் ஏலப்பொடி தேங்காய் துருவலுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் வெல்லம் தண்ணீர் சேர்த்து கரையவிடவும் விருப்பப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்
  4. பச்சை வாசனை போனவுடன் அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறவும்
  5. நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கி உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  6. கொழுக்கட்டை மாவில் செய்து வைத்த பூரணத்தை உள்ளே வைத்து கொழுக்கட்டையாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்
  7. ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்
  8. சுவையான கடலைப்பருப்பு பூரணக் கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்