வீடு / சமையல் குறிப்பு / புனே பக்கர்வாடி

Photo of Pune bakarwadi by Krishnasamy Vidya Valli at BetterButter
260
0
0.0(0)
0

புனே பக்கர்வாடி

Nov-08-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புனே பக்கர்வாடி செய்முறை பற்றி

மகாராஷ்டிர மாநிலத்தின் புனே எனும் ஊரில் மிகவும் பிரபலமாக செய்யப்படுகிறது பக்கர்வாடி. இந்த பண்டிகைக்கு செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மகாராஷ்டிரம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மேல்மாவிற்கு தேவையானவை
  2. மைதா மாவு 1/8 கப்+1 மேஜைக்கரண்டி
  3. கடலை மாவு 1/8 கப்
  4. உப்பு 1/8 தேக்கரண்டி
  5. காஷ்மீர் சில்லி பவுடர் 1/8 தேக்கரண்டி
  6. பொருங்காயம் 2 சிட்டிகை
  7. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  8. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி சூடு செய்து சேர்க்கவும்
  9. ஸ்டப்ஃபிங்கிற்கு தேவையானவை
  10. கரம் மசாலா கால் தேக்கரண்டி
  11. ஆம்சூர் பவுடர் கால் தேக்கரண்டி
  12. சீனி 2 தேக்கரண்டி
  13. வெறும் கடாயில் வறுக்க தேவையானவை
  14. தேங்காய் துருவல் ஒரு மேஜைக்கரண்டி
  15. கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி
  16. எள்ளு கால் தேக்கரண்டி
  17. கசகசா கால் தேக்கரண்டி
  18. மிளகு 1/4 தேக்கரண்டி
  19. சீரகம் கால் தேக்கரண்டி
  20. பெருஞ்சீரகம் கால் தேக்கரண்டி
  21. காஷ்மீரி சில்லி பெரியது 1
  22. தடவுவதற்கு அரை தேக்கரண்டி மற்றும் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. மேல் மாவிற்கு கொடுக்கப்பட்டவற்றை சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்துக் கொள்ளவும்
  2. வெறும் கடாயில் வறுக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  3. அதோடு ஸ்டப்பிங்கிற்கு கொடுக்கப்பட்ட மற்ற பொருட்களும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. மேல் மாவை லேசான பெரிய சப்பாத்தி போன்று இட்டுக் கொள்ளவும்
  5. அதன் மேல் அரை தேக்கரண்டி எண்ணை தடவி செய்து வைத்து ஸ்டஃபிங்கை பரப்பவும்
  6. ஒருபுறம் இருந்து சுருட்டிக் கொண்டு வரவும்
  7. கடைசியில் தண்ணீர் தொட்டு தடவி ஒட்டி விடவும்
  8. சிறிய சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்
  9. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  10. ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து பயன் படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்