வீடு / சமையல் குறிப்பு / டபுள் டெக்கர் கேக்

Photo of DOUBLE DECKER CAKE by Radha Balu at BetterButter
546
1
0.0(0)
0

டபுள் டெக்கர் கேக்

Nov-08-2018
Radha Balu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

டபுள் டெக்கர் கேக் செய்முறை பற்றி

இரு வண்ணங்கள் சேர்ந்த ஒரு பண்டிகை கால இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா—2  கப்
  2. சர்க்கரை---  3 கப்
  3. நெய்--  2  கப்
  4. ஏலப்பொடி--- 1  தேக்கரண்டி
  5. ஆரஞ்சு,  பச்சை  நிற  ஃபுட் கலர்

வழிமுறைகள்

  1. வாணலியில்  நெய்யை விட்டு  உருக வைக்கவும்.
  2. அதில்  மைதா  மாவைப் போட்டு,  கேஸை  சிம்மில் வைத்து  சிவக்காமல் வறுக்கவும்.
  3. அதனை இரண்டு  பாகமாக  பிரித்து வைத்துக்  கொள்ளவும்.
  4. 1½ கப்  சர்க்கரையை  ½ கப் தண்ணீர்  சேர்த்து கொதிக்க  விடவும். ½கரண்டி  பாலை  விட்டு அழுக்கை  நீக்கவும். 
  5. கம்பிப் பதமாக  வந்ததும் வாணலியைக்  கீழே இறக்கவும்.
  6. அதில்  நெய்யில்  வறுத்த மைதா,  ஏலப்பொடி, ஆரஞ்சுவண்ணப்  பொடி சேர்த்து  கைவிடாமல் வேகமாகக்  கிளறவும்.
  7. மீண்டும்  அடுப்பில் வைக்கக்  கூடாது.  அந்த சூட்டிலேயே கெட்டியாகிவிடும்.
  8. கலவை  சேர்ந்து  ஒட்டாமல் சுருண்டு  வரும்போது நெய் தடவிய  தட்டில் கொட்டி  சமமாக்கவும்.
  9. வாணலியை  அலம்பி  விட்டு  மீதியுள்ள  1½  கப்  சர்க்கரை +  ½ கப்  நீர்  சேர்த்து  முதலில்  கூறியபடியே  பாகு  வைக்கவும்.
  10. ஆரஞ்சுக்கு  பதிலாக பச்சைநிறப்பொடியை சேர்த்து  மேலே கூறியபடியே  கேக்கைக்கிளறவும். 
  11. அதனை  ஆரஞ்சு  நிற கேக்கின்  மேலே  கொட்டி  சமமாக்கவும்.
  12. இளஞ்சூடாக  இருக்கும் போதே  விரும்பிய வடிவத்தில் துண்டுகளாக்கவும்.
  13. எளிமையான,  அழகான, சுவையான, புதுமையான இந்த  டபுள் டெக்கர் கேக் சுவையிலும் இரட்டிப்பாக இருக்கும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்