Photo of BESAN LAADU by Radha Balu at BetterButter
725
1
3.0(0)
0

பேசன் லாடு

Nov-08-2018
Radha Balu
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பேசன் லாடு செய்முறை பற்றி

பேசன் என்பது கடலைமாவைக் குறிக்கும் ஹிந்தி சொல்.

செய்முறை டாக்ஸ்

  • தீபாவளி
  • மகாராஷ்டிரம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலை மாவு - 250 கிராம்
  2. நெய் - 150 கிராம்
  3. கோவா (இனிப்பில்லாதது) - 100 கிராம்
  4. சர்க்கரை - 400கிராம்
  5. ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
  6. முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகள் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலை மாவை சலித்துக் கொள்ளவும்.
  2. சர்க்கரையை மிகஸியில் நைஸாக அரைக்கவும்.
  3. வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து வைக்கவும்.
  4. பின்பு, எல்லா நெய்யையும் விட்டு உருகியதும், கடலை மாவைப் போட்டு கைவிடாமல் மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்கவும். 
  5. கடலை மாவு நிறம் மாறி, வாசனை வந்ததும், அதில் உதிர்த்த கோவா, வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சர்க்கரைப்பொடிசேர்க்கவும்
  6. அது சேர்ந்து கொண்டதும் இறக்கி ஏலப்பொடி சேர்க்கவும். கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். 
  7. சுலபமான, சுவையான பேசன் லாடு குழந்தைகளோடு, முதியவர்களும் சாப்பிட ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்