BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு சிக்கன் பிரியாணி

Photo of Chettinad chicken biryani by Rabia Hamnah at BetterButter
0
2
0(0)
0

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

Nov-09-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

விருந்தினர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்க

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி - 1/2 கி (3 கப்)
  2. வெங்காயம் - 2
  3. பச்சை மிளகாய் - 2,
  4. தேங்காய் - 1
  5. நெய்- 2 மேஜை கரண்டி
  6. உப்பு, எண்ணெய் - தேவைக்கு
  7. சிக்கனுடன் ஊற வைக்க
  8. சிக்கன் - 1/2 கிலோ
  9. தயிர் - 1/2 கப்
  10. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  11. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  12. உப்பு- தேவைக்கு
  13. அரைத்து கொள்ள வேண்டிய பொருட்கள்
  14. வத்தல்-2
  15. ப.மிளகாய் -2
  16. வெங்காயம் - 1 பெரியது
  17. பூண்டு - 10 பல்
  18. சோம்பு- 2 தே. கரண்டி
  19. கிராம்பு, ஏலக்காய், பட்டை - 1
  20. இஞ்சி - 2 துண்டு ,
  21. புதினா, மல்லி இலை-2கைப்பிடி
  22. முதலில் தாளிக்க
  23. எண்ணெய்+நெய் - 3மேஜை கரண்டி
  24. பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை - 1
  25. சோம்பு - 1 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. சிக்கனை சுத்தம் செய்து சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைத்து கொள்ளவும் அரிசியை பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
  3. பாத்திரத்தில் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  4. பாத்திரத்தில் நெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் வெங்காயம், அரைத்து வைத்துள்ள மசாலா, தக்காளி, ஊறவைத்துள்ள சிக்கன் என ஒவ்வொன்றாக தனி தனியாக சேர்த்து வதக்கி கொள்ளவும்
  5. 3 கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால் 2 கப் தண்ணீர் , தேவையான அளவு உப்பு புதினா இல்லை சேர்த்து ஊற்றி கொதி வந்தவுடன் அரிசியை சேர்க்கவும் அரிசி 3/4 பாகம் வெந்தவுடன் அதனை தம் போடவும். சூடான செட்டிநாடு சிக்கன் பிரியாணி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்