வீடு / சமையல் குறிப்பு / அவல் மிக்ஸர்

Photo of Poha mixture by Krishnasamy Vidya Valli at BetterButter
428
0
0.0(0)
0

அவல் மிக்ஸர்

Nov-09-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் மிக்ஸர் செய்முறை பற்றி

தீபாவளிக்கு மிச்சர் செய்வது வழக்கம் ஆனால் ரெகுலர் மிக்ஸர் செய்வது சிறிது கடினமான வேலை என்பதால் இந்த அவல் மிக்ஸர் செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. லேஸ் அவல் 1/2 கப்
  2. தேங்காய் பல் நீளமாக கீறியது 1 மேஜைக்கரண்டி
  3. பொரிகடலை 1 மேஜைக்கரண்டி
  4. பச்ச வேர்கடலை 1 மேஜைக்கரண்டி
  5. கடலைமாவு துக்கடிக்கு தேவையானவை
  6. கடலைமாவு 1 மேஜைக்கரண்டி
  7. அரிசி மாவு 1 தேக்கரண்டி
  8. உப்பு காரப்பொடி பெருங்காயம், சீரகம் தலா 1 சிட்டிகை
  9. எண்ணெய் 1/4 தேக்கரண்டி
  10. தாளிக்க
  11. எண்ணெய் 1 தேக்கரண்டி
  12. காஷ்மீர் சில்லி பவுடர் 1 தேக்கரண்டி
  13. மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி
  14. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  16. தனியா பொடி சீரகப்பொடி கரம்மசாலா ஆம்சூர் பொடி தலா 1/4 தேக்கரண்டி
  17. உப்பு 1/2 தேக்கரண்டி
  18. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அவலை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்
  2. தேங்காயை எண்ணெயில் பொரிக்கவும்
  3. வேர்கடலையை பொரிக்கவும்
  4. பொரிகடலையை பொரிக்கவும்
  5. கடலைமாவு துக்கடிக்கு கொடுக்கப்பட்டவற்றை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி போல பிசைந்து கொள்ளவும்
  6. நீளமாக உருட்டி கட்செய்து கொள்ளவும்
  7. எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  8. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வறுத்து வைத்த எல்லாம் சேர்த்து கிளறவும்
  9. ஏர் டைட் கன்டெய்னரில் வைத்து பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்