எனது பாட்டியின் காய்கறி இறால் | My granny's veggie prawn in Tamil

எழுதியவர் Divya Masilamani  |  16th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of My granny's veggie prawn by Divya Masilamani at BetterButter
எனது பாட்டியின் காய்கறி இறால் Divya Masilamani
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

29

0

எனது பாட்டியின் காய்கறி இறால் recipe

எனது பாட்டியின் காய்கறி இறால் தேவையான பொருட்கள் ( Ingredients to make My granny's veggie prawn in Tamil )

  • நடுத்தர அளவு இறால் - 1 கப்
  • சுரைக்காய் துண்டுகள் (தோலுரிக்கப்பட்டது) - 1 கப்
  • கேரட் துண்டுகள் - 1 கப்
  • வெங்காயம் - 2 எண்ணிக்கை
  • தக்காளி - 2 எண்ணிக்கை
  • பச்சை மிளகாய் - 3 எண்ணிக்கை
  • கறிவேப்பிலை
  • இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகம்
  • கடுகு
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு சுவைக்கு

எனது பாட்டியின் காய்கறி இறால் செய்வது எப்படி | How to make My granny's veggie prawn in Tamil

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபத்திக்கொள்ளவும். கடுகு சீரகம் சேர்க்கவும். வெடிக்கவிடவும். பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  2. இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன்பிறகு பொடியாக நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். எண்ணெய் வெளிவரும்வரை வதக்கவும்.
  3. இறால், சுரைக்காய், கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
  4. கடாயை ஒரு மூடியால் மூடவும். சிறு தீயை வேகவைக்கவும். அனைத்துக் காய்கறிகளும் இறாலும் வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
  5. ஒரு எளிய பாரம்பரிய காய்கறி இறால் தயார். சாதத்தோடும் சப்த்தியோடும் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

குழம்பாகவும் அல்லது சற்றே உலர்/சப்பாத்தி மற்றும் தோசைக்கான பாதி குழம்பு மசாலாவாகவும் தயாரிக்கலாம்.

Reviews for My granny's veggie prawn in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.