வீடு / சமையல் குறிப்பு / எனது பாட்டியின் காய்கறி இறால்

Photo of My granny's veggie prawn by Divya Masilamani at BetterButter
1256
7
4.0(0)
0

எனது பாட்டியின் காய்கறி இறால்

Jul-16-2016
Divya Masilamani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நடுத்தர அளவு இறால் - 1 கப்
  2. சுரைக்காய் துண்டுகள் (தோலுரிக்கப்பட்டது) - 1 கப்
  3. கேரட் துண்டுகள் - 1 கப்
  4. வெங்காயம் - 2 எண்ணிக்கை
  5. தக்காளி - 2 எண்ணிக்கை
  6. பச்சை மிளகாய் - 3 எண்ணிக்கை
  7. கறிவேப்பிலை
  8. இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  11. சீரகம்
  12. கடுகு
  13. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  14. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபத்திக்கொள்ளவும். கடுகு சீரகம் சேர்க்கவும். வெடிக்கவிடவும். பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  2. இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன்பிறகு பொடியாக நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். எண்ணெய் வெளிவரும்வரை வதக்கவும்.
  3. இறால், சுரைக்காய், கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
  4. கடாயை ஒரு மூடியால் மூடவும். சிறு தீயை வேகவைக்கவும். அனைத்துக் காய்கறிகளும் இறாலும் வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
  5. ஒரு எளிய பாரம்பரிய காய்கறி இறால் தயார். சாதத்தோடும் சப்த்தியோடும் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்