வீடு / சமையல் குறிப்பு / அரிசி உளுத்தங்களி | ஆரோக்கியமான நமது பாரம்பரிய உணவுக் குறிப்பு

Photo of Rice and Urad Dal Kali | Healthy and our Traditional Recipe by Babitha Costa at BetterButter
1606
8
0.0(0)
0

அரிசி உளுத்தங்களி | ஆரோக்கியமான நமது பாரம்பரிய உணவுக் குறிப்பு

Jul-16-2016
Babitha Costa
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 1 கப்
  2. உளுந்து - 3/4 கப்
  3. பனை வெல்லம் / கருப்பட்டி - 1 கப்
  4. சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி
  5. தேங்காயத் துருவல் - 1/2 கப்
  6. தண்ணீர் - 4ல் இருந்து 5 கப்

வழிமுறைகள்

  1. அரிசிப் பருப்பைத் தண்ணீரில் சுத்தப்படுத்தி 6-8 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. அதன்பிறகு தண்ணீரை வடிக்கட்டி தண்ணீருடன் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்த்து மாவைத் தண்ணீர் பதத்திற்கு தயாரித்துக்கொள்ளவும்.
  3. இதற்கிடையில் கருப்பட்டி/பனைவெல்லத்தோடு 1 கப் தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்கவிடவும். அடுப்பை நிறுத்திவிட்டு வடிக்கட்டியில் வடிக்கட்டிக்கொள்ளவும். (பனை வெல்லத்தில் அழுக்கு இருக்கும் என்பதால்)
  4. இதை கொஞ்சம் கொஞ்சமாக சுக்குப்பொடியுடன் மாவில் கலந்துகொள்ளவும். இனிப்பைச் சரிபார்த்துத் தேவைப்பட்டால் மேலும் சேர்த்துக்கொள்ளவும்.
  5. கலவையை ஒரு கனமான அடிப்பாகமுள்ள கடாயில் ஊற்றி தொடர்ந்து சிறு தீயில் கலக்கவும். (கலக்காமல் விட்டால் கட்டி சேர்ந்துவிடும்)
  6. ஒரு கட்டத்தில் பாதி அடர்த்தியாக மாறிவிடும். தேங்காய்த் துருவலை இதனோடு சேர்த்து அடுப்பை நிறுத்தவும். நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்