ஸ்ரீலங்கா மீன் குழம்பு | Sri Lankan Fish Kozhambu (Curry) in Tamil

எழுதியவர் Suzie Nagarajah  |  16th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Sri Lankan Fish Kozhambu (Curry) by Suzie Nagarajah at BetterButter
ஸ்ரீலங்கா மீன் குழம்புSuzie Nagarajah
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

129

0

Video for key ingredients

  ஸ்ரீலங்கா மீன் குழம்பு recipe

  ஸ்ரீலங்கா மீன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Sri Lankan Fish Kozhambu (Curry) in Tamil )

  • சுவைக்கேற்ற உப்பு
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • வெந்தயம் - கொஞ்சம்
  • புளி விழுது - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி விழுது - 1தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • தண்ணீர் - 1/2 கப்
  • தேங்காய் பால் - 1.5 கப்
  • தக்காளி - 2
  • வெங்காயம் - 1 பெரியது
  • கொடுவாய் மீன் அல்லது வஞ்சிரம் மீன் - 1/2 கிலோ

  ஸ்ரீலங்கா மீன் குழம்பு செய்வது எப்படி | How to make Sri Lankan Fish Kozhambu (Curry) in Tamil

  1. தக்காளி, வெங்காயத்தை நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. மீனைக் கழுவிச் சுத்தப்படுத்தித் துண்டுபோட்டுக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் (சமைக்கும் பானை) கொஞ்சம் எண்ணெயை மிதமானச் சூட்டில் சூடுபடுத்தி வெங்காயம், வெந்தயம் சேர்க்கவும்.
  4. அதன்பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பளபளப்பாக மாறும்வரை வதக்கவும்.
  5. இஞ்சி விழுது, உப்பு, தக்காளி சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  6. மீன் துண்டுகள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தண்ணீர் சேர்க்கவும். சற்றே கலந்து கொதிக்கவிடவும்.
  7. தண்ணீர் குறையும்போது 1/2 கப் பால் சேர்த்து தொடர்ந்து வேகவைக்கவும்.
  8. திரவம் குறையும், அதன்பின்னர் மீதமுள்ளப் பால், புளி விழுது சேர்க்கவும். மூடியால் முடி கொதிக்கவிடவும்.
  9. தண்ணீர் இருப்பு குறையும், குழம்பு அடர்த்தியாகும். இந்த நிலையில் சீரகத் தூள், மிளகுத்தூள் சேர்க்கவும். நன்றாகக் கலந்து மென்மையான மீன் துண்டுகளை உடைக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
  10. அடுப்பிலிருந்து எடுத்து சூடாக கொஞ்சம் ஆவிபறக்கும் சாதம் அல்லது ரொட்டியோடும் நானோடும் கூட சிறப்பாக இருப்பதால், பரிமாறவும்.

  Reviews for Sri Lankan Fish Kozhambu (Curry) in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.