Photo of RAVA LADDU by Shobana Rajesh at BetterButter
359
0
0.0(0)
0

ரவா லட்டு

Nov-12-2018
Shobana Rajesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா லட்டு செய்முறை பற்றி

இந்த ரவா லட்டு ஸ்வீட் பண்டிகை காலங்களிலும் விசேஷ காலங்களிலும் எளிதாகவும் உறுதியானதாகவும் செய்து அனைவராலும் உண்டு மகிழக் கூடிய ஒரு உணவு வகை ஆகும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேவையான பொருட்கள்
  2. ரவை 2 கப்
  3. சர்க்கரை 3 கப்
  4. நெய் ஒரு குழிகரண்டி
  5. நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சிறிதளவு
  6. வெதவெதப்பான பால் கால் டம்ளர்

வழிமுறைகள்

  1. செய்முறை
  2. முதலில் ரவையை சிறிதளவு நெய்யில் நன்றாக மிதமான தீயில் வைத்து ரவை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும் மிகவும் பொன் நிறமாக வறுக்கக்கூடாது மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. சர்க்கரையை மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்
  4. ரவையை சர்க்கரையுடன் சேர்த்து சிறிதளவு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்
  5. இப்பொழுது வைத்துள்ள முந்திரி திராட்சை சர்க்கரை ரவை கலவைகளுடன் ஒன்றாக சேர்த்து ஏலக்காய் பொடியை சிறிதளவு சேர்த்து கொள்ள வேண்டும்
  6. இப்பொழுது குழி கரண்டி நெய்யை மிதமான தீயில் சூடாக்கி அந்த கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி உருண்டைகளாக பிடித்து பிடித்து வைத்து வேண்டும் தேவைப்பட்டால் மிதமான சூடுள்ள பாலை தெளித்து லட்டு பிடிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்