வீடு / சமையல் குறிப்பு / மினி ஜாங்கிரி

Photo of Mini jangri by Rachell Revathi Samuel at BetterButter
358
1
0.0(0)
0

மினி ஜாங்கிரி

Nov-12-2018
Rachell Revathi Samuel
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மினி ஜாங்கிரி செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் செய்யப்படும் இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுத்தம்பருப்பு 1/2 கப்
  2. கேசரி கலர் 1/4 ஸ்பூன்
  3. சர்க்கரை 1/2 கப்
  4. தண்ணீர் 1/4 கப்
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உளுந்தம் பருப்பை 2-3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் ஊற வைத்த உளுந்தம் பருப்பை தண்ணீர் நீக்கி சேர்க்கவும்.
  3. தண்ணீர் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
  4. அரைத்த மாவை பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
  5. கேசரி கலர் சேர்க்கவும்.
  6. நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. பால் பாக்கெட் அல்லது பாலிதின் கவரில் மாவை வைத்து கோன் வடிவில் எடுத்து கொள்ளவும். நுனியில் சிறியதாக வெட்டிக் கொள்ளவும்.
  8. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சர்க்கரை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. 1கம்பி பதம் வந்ததும் இறக்கவும்.சர்க்கரை பாகு தயார்.
  10. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாக்கெடில் உள்ள மாவை சிறு வட்டங்களாக சுற்றவும். நன்றாக பொரிந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.
  11. பொரித்த ஜாங்கிரிகளை சர்க்கரை பாகில் போட்டு 15-20 நிமிடங்கள் வைக்கவும்.
  12. சுவையான மினி ஜாங்கிரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்