வீடு / சமையல் குறிப்பு / தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் & ஸ்நேக்ஸ்

Photo of Diwali special sweets recipe by Surya Rajan at BetterButter
1399
0
0.0(0)
0

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் & ஸ்நேக்ஸ்

Nov-12-2018
Surya Rajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் & ஸ்நேக்ஸ் செய்முறை பற்றி

ராகி முறுக்கு மசாலா அவல் மசாலா கார்ன் மைதா பிஸ்கட் ரவா லட்டு சோமாஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மசாலா அவல் செய்வதற்கு
  2. அவல் ஒரு கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. வேர்க்கடலை 2 ஸ்பூன்
  6. நட்ஸ் 2ஸ்பூன்
  7. மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  8. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  9. மைதா பிஸ்கட் செய்வதற்கு
  10. மைதா ஒரு கப்
  11. நெய் 2 ஸ்பூன்
  12. பொடித்த சர்க்கரை அரை கப்
  13. எண்ணெய் பொரிப்பதற்கு
  14. சோமாஸ் செய்வதற்கு
  15. மைதா ஒரு கப்
  16. ரவை இரண்டு ஸ்பூன்
  17. உப்பு ஒரு சிட்டிகை
  18. எண்ணை பொரிப்பதற்கு
  19. பூரணம் செய்வதற்கு
  20. பொட்டுக்கடலை மாவு கால் கப்
  21. துருவிய தேங்காய் கால் கப்
  22. பொடி செய்த சர்க்கரை கால் கப்
  23. மசாலா கார்ன் செய்வதற்கு
  24. கார்ன் ப்ளெக்ஸ் ஒரு கப்
  25. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  26. மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  27. கருவேப்பிலை சிறிதளவு
  28. நட்ஸ் இரண்டு ஸ்பூன்
  29. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  30. உப்பு தேவையான அளவு
  31. ராகி முறுக்கு செய்வதற்கு
  32. ராகி மாவு ஒரு கப்
  33. எண்ணை பொரிப்பதற்கு
  34. உப்பு தேவையான அளவு
  35. கடலை மாவு கால் கப்
  36. சீரகம் ஒரு ஸ்பூன்
  37. மிளகாய் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மசாலா அவல் செய்வதற்கு
  2. வெறும் வாணலியில் அவல் சேர்த்து 3 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பின் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வேர்க்கடலை கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. பின் சிறிதளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு வறுத்து வைத்துள்ள அவல் சேர்த்து கிளறவும்
  5. மைதா பிஸ்கட் செய்வதற்கு
  6. ஒரு பாத்திரத்தில் மைதா நெய் பொடி செய்து வைத்துள்ள சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்
  7. பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  8. பின் அதனை வட்டவடிவமாக திக்காக ரோல் செய்து கொள்ளவும்
  9. பின் அதனை டைமண்ட் வடிவில் கட் செய்யவும்
  10. சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  11. சோமாஸ் செய்வதற்கு
  12. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்
  13. பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்
  14. பூரணம் செய்வதற்கு கடாயில் சிறிது நெய் விட்டு தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்
  15. அதனுடன் பொட்டுக்கடலை மாவு பொடி செய்து வைத்துள்ள சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  16. பிசைந்து வைத்துள்ள மாவினை உருட்டி சிறிய வட்ட வடிவங்களாக்கிக் கொள்ளவும்
  17. பின் அதனை சோமாஸ் அச்சில் வைத்து பூரணம் ஸ்டஃப் செய்து எடுத்துக் கொள்ளவும்
  18. பின் அதனை சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  19. மசாலா கார்ன் செய்வதற்கு
  20. கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நட்ஸ் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
  21. பின் அதனுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு கருவேப்பிலை சேர்த்து கிளறி அடுப்பை ஆப் செய்யவும்
  22. ராகி முறுக்கு செய்வதற்கு
  23. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு வெண்ணெய் உப்பு மிளகாய்த்தூள் பொட்டுக்கடலை மாவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்
  24. பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்
  25. பின் அதனை முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக தயார் செய்து வைக்கவும்
  26. பின் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்