வீடு / சமையல் குறிப்பு / சுவையான அக்ரூட் பால்கோவா

Photo of Delicious Walnut Milk Peda by Hameed Nooh at BetterButter
483
3
0.0(0)
0

சுவையான அக்ரூட் பால்கோவா

Nov-12-2018
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுவையான அக்ரூட் பால்கோவா செய்முறை பற்றி

அக்ரூட்டை வறுத்து பொடித்து பால் சர்க்கரை ஏலக்காய்த்தூள் நெய் ஆகியவற்றை சேர்த்து செய்யக்கூடிய சுவையான அக்ரூட் பால்கோவா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அக்ரூட் 1 கப்
  2. பால் 2 லிட்டர்
  3. சர்க்கரை 8 மேஜைக்கரண்டி
  4. ஏலக்காய் தூள் ஒரு தேக்கரண்டி
  5. நெய் 5 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. அக்ரூட்டை நான்கு மணி நேரங்கள் தண்ணீரில் ஊற வைத்து பிறகு தோலை நீக்கவும்
  2. பிறகு அதனை நன்றாக காயவைத்து ஈரப்பதம் சென்றதும் வாணலியில் சிறிது வறுத்து எடுக்கவும்
  3. இனி வறுத்த அக்ரூட்டை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  4. அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அது பாதி அளவாக கெட்டியாகும் வரை கைவிடாமல் இடையிடையே கிளறி கொண்டே இருக்கவும்
  5. பிறகு அதோடு பொடித்த அக்ரூட்டை சேர்க்கவும்
  6. அக்ரூட் பாலுடன் சேர்ந்து நன்றாக வெந்ததும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்
  7. 2 நிமிடங்கள் கழித்து நெய்யை சிறிது சிறிதாக ஊற்றவும்
  8. இனி ஏலக்காய்த்தூளை சேர்த்து கலவை பாத்திரத்திலிருந்து பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  9. சூடாகவும் இதனை சாப்பிடலாம் இல்லையென்றால் ஆறியதும் குளிரூட்டி விருப்பமான வடிவத்தில் வெட்டியும் பரிமாறலாம்
  10. சுவையான அக்ரூட் பால்கோவா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்