வீடு / சமையல் குறிப்பு / ராகி தட்டவடை

Photo of Ragi thattavada by sudha rani at BetterButter
367
0
0.0(0)
0

ராகி தட்டவடை

Nov-13-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராகி தட்டவடை செய்முறை பற்றி

சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராகி மாவு 1 கப்
  2. அரிசி மாவு 1/4 கப்
  3. பொட்டுக்கடலை மாவு 1/2 கப்
  4. பூண்டு 6
  5. சீரகம் 1 ஸ்பூன்
  6. ஓமம் 1/4 ஸ்பூன்
  7. வரமிளகாய் 8
  8. கறிவேப்பிலை சிறிது
  9. ஊறவைத்த கடலைப்பருப்பு சிறிது
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ராகி மாவு அரிசி மாவு பொட்டுக்கடலை மாவு சேர்த்து ஜலிக்கவும்
  2. பூண்டு சீரகம் ஓமம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. ஜலித்த மாவுடன் உப்பு மற்றும் அரைத்த விழுது ஊறவிட்ட கடலைப்பருப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. உருண்டை பிடித்து பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி மெலிதாக தேய்த்து ஒரு துணியின் மேல் தனித்தனியாக வைக்கவும்
  5. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  6. முதலில் எல்லா மாவையும் திரட்டி வைத்து பின் பொரித்தால் கருக விடாமல் நிதானமாக பொரித்து எடுக்கலாம்
  7. துணியின் மேல் வைப்பது ஏதாவது ஈரப்பதம் அதிகம் இருந்தால் சரியாகி விடும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்