வீடு / சமையல் குறிப்பு / மோதிச்சூர் லட்டு

Photo of Mothichoor ladoo by Adaikkammai Annamalai at BetterButter
464
2
0.0(0)
0

மோதிச்சூர் லட்டு

Nov-13-2018
Adaikkammai Annamalai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மோதிச்சூர் லட்டு செய்முறை பற்றி

லட்டு விரும்போதோார் யாராவது உண்டா ,,, லட்டு என்றாலே சிறு வயதினர் முதல் பெரியவர் வரை வாயை கட்டுப்படுத்த முடியாத ஒரு இனிப்பு, இதை சுலபமாக செய்யும் முறையை காணலாம்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ராஜஸ்தான்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலை மாவு  – 2 கப்
  2. சர்க்கரை  – 3 கப்
  3. நெய் - 1/4 கப்
  4. முந்திரி,திராட்சை - கால் கப்
  5. தண்ணீர்  - 2 கப்
  6. லட்டு கலர் - 2 tsp

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை வானொலியில் வறுத்து எடுத்து சலித்து வைத்து கொள்ளவும்,
  2. கடலை மாவுடன் நீரை ஊற்றி அதில் கலர் பொடியை சேர்த்து நன்கு கரைக்க வேண்டும். 
  3. பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கரைத்து வைத்த மாவை லட்டுக் கரண்டி அல்லது சல்லடைக் கரண்டியால் எடுத்து  நன்கு காய்ந்த எண்ணெயில் ஊற்ற வேண்டும்.
  4. பூந்தி நன்கு முத்து முத்தாக விழ வேண்டும்.அடுப்பின் அனலை மிதமாக எரிய விட வேண்டும்
  5. பூந்தி நன்கு வெந்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  6. பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகுவை அதாவது சர்க்கரையுடன் நீ்ரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதித்ததும் மிதமான சூட்டில் பத்து நிமிடம் சர்க்கரை பாகுவை வைக்க வேண்டும். 
  7. இதில் தனியே எடுத்து வைத்துள்ள பூந்தி, மற்றும் நெய்யில் வறுத்துள்ள முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு அடுப்பில் வைத்து கிளறி மூடி போட்டு 10 நிமிடம் வைக்கவும் ஒன்றாக சேர்ந்த பின் இறக்கவும்
  8. நன்கு கலக்க வேண்டும். கைகளில் சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு கைப் பொறுக்கும் சூட்டில்்  சிறு சிறு உருண்டையாகப் பிடிக்க வேண்டும்.
  9. சுவையான லட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்