BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாதாம் அல்வா

Photo of Badam halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

பாதாம் அல்வா

Nov-13-2018
Krishnasamy Vidya Valli
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாதாம் அல்வா செய்முறை பற்றி

தீபாவளிக்கு கண்டிப்பாக செய்யும் இனிப்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • దీపావళి
  • దక్షిణ భారతీయ
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாதாம் 1/2 கப்
  2. பால் 1/4 கப்
  3. சீனி 3/4 கப்
  4. குங்குமப்பூ 10 முதல் 15 ஸ்டிரிங்ஸ்
  5. நெய் 1/3 கப்

வழிமுறைகள்

  1. பாதாமை வெந்நீரில் ஊற வைத்து தோல் உரித்து பின்னர் பாலில் (1 மேஜைக்கரண்டி பால் தனியாக வைக்கவும்) ஊற வைக்கவும்
  2. அப்படியே மிக்ஸியில் கரகரவென அரைத்துக்கொள்ளவும்
  3. சிறிது( தனியாக வைத்த பாலை சூடு செய்யவும்)சூடு பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் சிறிது நெய் விட்டு அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  5. பச்சை வாசனை போனவுடன் பாலில் ஊற வைத்த குங்குமப்பூ மற்றும் சீனி சேர்த்து கிளறவும்
  6. நெய்யை சிறிது சிறிதாக விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்
  7. பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் மேலே வரும் வரை கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்