வீடு / சமையல் குறிப்பு / குடமிளாகய் கொஸ்து

Photo of Capsicum Gotsu by Saranya Sridharan at BetterButter
2903
5
0.0(0)
0

குடமிளாகய் கொஸ்து

Jul-17-2016
Saranya Sridharan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குடமிளகாய் - 2 பெரியது, துண்டுகளாக நறுக்கப்பட்டது
  2. பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கப்பட்டது
  3. கடுகு - 1 தேக்கரண்டி
  4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  5. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை - கையளவு
  7. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  9. சிவப்பு மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
  10. மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
  11. வெல்லம் - தூள் செய்யப்பட்டது, 2 தேக்கரண்டி
  12. புளி - ஒரு எலுமிச்சை அளவு உருண்டை
  13. உப்பு சுவைக்கு
  14. தாளிப்புக்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில், எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்க்கவும்.
  2. அவை பொரிய ஆரம்பித்ததும், கடலை பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
  3. அடுத்து, குடமிளகாயையும் பச்சை மிளகாயையும் சேர்க்கவும்.
  4. அனைத்து மசாலா பொருள்களையும், உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  5. குடமிளகாயை ஒரு நிமிடம் வதக்கிக்கொள்ளவும்.
  6. பிழிந்தெடுத்துககொண்ட புளித்தண்ணீரை கடாயில் சேர்க்கவும்.
  7. மூடியிட்டு மூடி கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  8. கொதிக்க ஆரம்பித்ததும், அதனோடு வெல்லத்தைச் சேர்க்கவும்.
  9. தண்ணீர் பதத்தில் இருந்தால் கொஞ்சம் அரிசி மாவை தண்ணீரோடு சேர்த்து பதத்தைச் சரிசெய்துகொள்ளலாம். இதை மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.
  10. அடுப்பை நிறுத்தி சாதத்தோடு அல்லது பொங்கலோடுச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்