வீடு / சமையல் குறிப்பு / ராகி சாக்கோ முறுக்கு

Photo of Ragi choco chiki by Rachell Revathi Samuel at BetterButter
241
1
0.0(0)
0

ராகி சாக்கோ முறுக்கு

Nov-13-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ராகி சாக்கோ முறுக்கு செய்முறை பற்றி

கொக்கோ பவுடர் சேர்த்து செய்யப்படும் ராகி முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ராகி மாவு 1/2 கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. பொரிகடலை மாவு 1/4 கப்
  4. கொக்கோ பவுடர் (சர்க்கரை சேர்க்கப் பட்டது) 3 ஸ்பூன்
  5. சூடான எண்ணெய் 2 ஸ்பூன்
  6. உப்பு சிறிது
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு அரிசி மாவு பொரி கடலை மாவு கொக்கோ பவுடர் எடுத்துக் கொள்ளவும்.
  2. அனைத்தையும் நன்றாக கலந்து பின் சூடான எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கலந்து கொள்ளவும்.
  3. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  4. முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  5. முறுக்கு அச்சில் விரும்பிய வடிவில் சுற்றி கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சுற்றிய மாவை போட்டு பொரித்து எடுக்கவும்.
  7. கருக விடாமல் மொறு மொறு வந்ததும் எடுத்து விடவும்
  8. சுவையான ராகி சாக்கோ முறுக்கு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்