வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் தேங்காய் ரோசாப்பூ குல்சா !

Photo of Coconut milk coconut Rose Kulcha! by Ramani Thiagarajan at BetterButter
543
0
0.0(0)
0

தேங்காய் பால் தேங்காய் ரோசாப்பூ குல்சா !

Nov-14-2018
Ramani Thiagarajan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் தேங்காய் ரோசாப்பூ குல்சா ! செய்முறை பற்றி

இது மிகவும் ஆரோக்கியமானதும், ருசி மிகுந்ததுமான உணவு ஆகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • அக்கம்பனிமென்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 1கப்
  2. வெல்லம் 1/4 கப்
  3. சர்க்கரை 1/4 கப்
  4. பேக்கங் பவுடர் 1/2 தேக்கரண்டி
  5. பேக்கிங் சோடா 1/2 தேக்கரண்டி
  6. தயிர் 1/4 கப்
  7. பால் 1/4 கப்
  8. வெண்ணெய் 2 தேக்கரண்டி
  9. எண்ணெய் 2 தேக்கரண்டி
  10. நெய் 2 தேக்கரண்டி
  11. ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
  12. குங்குமப்பூ 1 சிட்டிகை
  13. உலர் கொட்டை வகைகள் பாதாம்,முந்திரி, போன்றவை சிறிதளவு.
  14. புளூ பெர்ரி,காய்ந்த திராட்சை போன்ற உலர் பழ வகைகள் சிறிது.
  15. உப்பு தேவையான அளவு.
  16. தேங்காய் பால் 1/2 கப்
  17. தேங்காய் துருவல் 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு நடுவில் பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு,ஒரு தேக்கரண்டி சர்க்கரை,ஒரு தேக்கரண்டி நெய்,தயிர் சேர்க்கவும்.
  2. பால் சேர்த்து பிசையவும்.
  3. ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
  4. பாதாம் போன்ற உலர் கோட்டைகளை பொடித்துக்கொள்ளவும்.
  5. தேங்காயை நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
  6. நெய்யில் வறுத்த தேங்காய்.
  7. புளூ பெர்ரி,உலர் திராட்சை போன்ற பழ வகைகளை சிறு துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுக்கவும்.
  8. சர்க்கரை, வெல்லம் இரண்டையும் நீரில் கரைத்து காய்ச்சி அதனுடன் தேங்காய் பால்,தேங்காய்,பொடித்த பருப்பு வகைகள்,வறுத்த உலர் பழ வகைகள்,ஏலக்காய் தூள்,குங்குமப்பூ,சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  9. சிறிது நேரம் கிளறவும்.
  10. இவ்வாறு வந்தவுடன் இறக்கி உருண்டைகளாக உருட்டவும்.
  11. ஊறவைத்த மாவில் இருந்து சிறிது எடுத்து தட்டி உருண்டையை வைத்து மூடவும்.
  12. சிலிகான் மோல்டில் வைத்து அழுத்தி எடுத்து வைக்கவும்.
  13. பேக்கிங் அவனில் 180c யில் 20 நிமிடங்கள் வேக விடவும்.
  14. தேங்காய் பூ, பழ வடிவங்கள் கொண்டு அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்