வீடு / சமையல் குறிப்பு / கீரீன் ஆப்பிள் சிக்கன் கிரேவி

Photo of Green Apple Chicken Gravy by Asiya Omar at BetterButter
592
2
0.0(0)
0

கீரீன் ஆப்பிள் சிக்கன் கிரேவி

Nov-14-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீரீன் ஆப்பிள் சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

கீரீன் ஆப்பிள் சேர்த்து சிக்கன் செய்யும் பொழுது புளிப்பும் இனிப்பும் சேர்ந்து சுவைக்கும் இந்த கிரேவி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கிரீன் ஆப்பிள் -1
  2. எலும்பில்லா சிக்கன் துண்டுகள் -1/4 கிலோ
  3. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  4. சிக்கனில் ஊற வைக்க:
  5. கெட்டி தயிர் -3 மேஜைக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  7. உப்பு -சிறிது.
  8. அரைக்க:-
  9. நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் -1
  10. பச்சை மிளகாய் -3
  11. மல்லி இலை - அரை கப்
  12. புதினா இலை - கால் கப்
  13. கீரீம் சீஸ் -2 மேஜைக்கரண்டி ( விரும்பினால்)
  14. உப்பு - சுவைக்கு.
  15. அலங்கரிக்க : நறுக்கிய மல்லி இலை சிறிது,கிஸ்மிஸ் பழம் -1 மேஜைக்கரண்டி.

வழிமுறைகள்

  1. அரைக்க தேவையான பொருட்கள் தோல் சீவிய கிரீன் ஆப்பிள் துண்டுகள், மல்லி,புதினா,பச்சை மிளகாய்,கிரீம் சீஸ் 3 மேஜைக்கரண்டி மிக்டி பவுலில் சேர்க்கவும்.
  2. நைசாக அரைத்து எடுக்கவும்.
  3. சிக்கனோடு தயிர்,இஞ்சி பூண்டு ,உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  4. ஒரு பேனில் 1- 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விடவும்.
  5. அரைத்த விழுது சேர்க்கவும்.
  6. சிறிது கொதிவரட்டும். ஊறிய சிக்கன் சேர்க்கவும்.
  7. மூடி சிக்கன் வேக விடவும்.
  8. சிக்கன் வெந்து கிரேவி பச்சை வாடை அடங்க வேண்டும்.
  9. நறுக்கிய மல்லி இலை,கிஸ்மிஸ் பழம் ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து அலங்கரிக்கவும்
  10. கிரேவி கிரீமியாக தயார் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்
  11. சுவையான கிரீன் ஆப்பிள் சிக்கன் கிரேவி தயார். நாண்,ரொட்டி, ப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்