வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் உப்புமா

Photo of Coconut milk upma by Asiya Omar at BetterButter
451
0
0.0(0)
0

தேங்காய்ப்பால் உப்புமா

Nov-14-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் உப்புமா செய்முறை பற்றி

தேங்காய்ப்பால் சேர்த்து வெள்ளைவெளேர்னு உப்புமா செய்து சட்னியுடன் பரிமாற சுவை அபாரம்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை -300 கிராம்
  2. கெட்டி தேங்காய்ப்பால் - ஒரு கப்
  3. நறுக்கிய பெரிய வெங்காயம் -1
  4. நறுக்கிய பூண்டு -5 பற்கள்
  5. நறுக்கிய இஞ்சி 1 இஞ்ச் துண்டு
  6. நறுக்கிய பச்சை மிளகாய் -2
  7. கிள்ளிய மிளகாய்வற்றல் -2
  8. முந்திரி பருப்பு - 12
  9. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  10. கருவேப்பிலை -2 இணுக்கு
  11. உப்பு - தேவைக்கு
  12. எண்ணெய் -3 மேஜைக்கரண்டி
  13. கடுகு,உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
  14. நெய் - 2+1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. நறுக்க வேண்டிய பொருட்கள் நறுக்கி வைக்கவும். அரை மூடி தேங்காயில் பால் எடுத்து வைக்கவும்.
  2. ரவையை 2 தேக்கரண்டி நெய் விட்டு மணம் வரும் படி சிவறாமல் பொறுமையாக வறுத்து எடுக்கவும்.
  3. ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.கடுகு,உளுத்தம் பருப்பு,மிளகாய் வற்றல்,முந்திரி பருப்பு போட்டு தாளித்து பொரிய விடவும்.
  4. கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு சிவறாமல் வதக்கவும்.
  5. வறுத்த ரவையின் அளவிற்கு ஒரு அளவு தேங்காய்ப்பால் 2 அளவு தண்ணீர் சேர்க்கவும்.உப்பு தேவைக்கு அளவாகச் சேர்க்கவும்.
  6. கொதி வரட்டும்.சிறிது நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  7. கொதிக்க ஆரம்பிக்கும் பொழுதே வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
  8. ரவை முழுவதும் தட்டியதும் அடுப்பைக் குறைத்து மூடி சிம்மில் வைக்கவும்.ரவை வெந்து வரும் பொழுது நெய் 2 தேக்கரண்டி மேலே விடவும்.
  9. ரவை வெந்து கெட்டியாகும்.
  10. நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  11. பிரட்டி விடவும்.
  12. குழிக்கரண்டியால் உருண்டையாக எடுக்கவும்.சுவையான தேங்காய்ப்பால் உப்புமா தயார்.
  13. சட்னிக்கு,ஒரு கப் தேங்காய்த்துருவல்,ஒரு பல் பூண்டு,இரண்டு பச்சை மிளகாய்,சிறிது மல்லி இலை,உப்பு சுவைக்கு சேர்த்து அரைக்கவும்.ஒரு தேக்கரண்டி எண்ணெய்,கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.சட்னி தயார். சுவையான தேங்காய்ப்பால் உப்புமாவைச் சட்னியுடன் பரிமாறவும்.செமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்