கத்திரிக்காய் புலாவ் | Brinjal pulav( one pot meal) in Tamil

எழுதியவர் Asiya Omar  |  15th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Brinjal pulav( one pot meal) by Asiya Omar at BetterButter
கத்திரிக்காய் புலாவ்Asiya Omar
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

2

0

கத்திரிக்காய் புலாவ் recipe

கத்திரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Brinjal pulav( one pot meal) in Tamil )

 • பிஞ்சு கத்திரிக்காய் -100 கிராம்
 • பாசுமதி அல்லது சீரக சம்பா அல்லது பச்சரிசி -200 கிராம்
 • நறுக்கிய பெரிய வெங்காயம் -1
 • நறுக்கிய மிளகாய் -2
 • மல்லி கருவேப்பிலை சிறிது
 • எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
 • நெய் -1 தேக்கரண்டி
 • இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
 • கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
 • மல்லித்தூள் -1/4 தேக்கரண்டி
 • சீரகத்தூள் -1/4 தேக்கரண்டி
 • தயிர் -1 மேஜைக்கரண்டி
 • எலுமிச்சை ஜூஸ் - 1/2 தேக்கரண்டி
 • உப்புத் - தேவைக்கு.

கத்திரிக்காய் புலாவ் செய்வது எப்படி | How to make Brinjal pulav( one pot meal) in Tamil

 1. மேற்சொன்ன தேவையான பொருட்கள் தயார் செய்யவும்.
 2. அரிசி முதலில் அலசி ஊற வைக்கவும்.கத்திரிக்காய் நறுக்கி உப்பு நீரில் போடவும்,கறுக்காது.
 3. குக்கரில் எண்ணெய் விடவும். நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய்,ஒரு இணுக்கு கருவேப்பிலை சேர்க்கவும்.
 4. நன்கு சிவறும் பொழுது ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
 5. நன்கு வாடை மடங்க வதக்கவும்,தயிர் முந்திரி பருப்பு சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
 6. மசாலா மஞ்சள்,மல்லி,சீரகத்தூள்,கரம் மசாலா தலா கால் தேக்கரண்டி சேர்த்து சிம்மில் வைக்கவும்.
 7. நன்கு ஒரு சேர பிரட்டவும்.
 8. நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
 9. தேவைக்கு 1:2 தண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.
 10. நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
 11. கொதி வரும் பொழுது அரிசி சேர்க்கவும்.
 12. கலந்து மூடும் பொழுது அரை தேக்கரண்டி எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.
 13. ஆவி வரும் பிழுது வெயிட் போடவும் அடுப்பைக் குறைத்து 10 நிமிடம் வைத்து அணைக்கவும்.
 14. 5 நிமிடம் கழித்து திறக்கவும்.
 15. நெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து பிரட்டவும்.
 16. கம கமக்கும் கத்திரிக்காய் புலாவ் தயார்.
 17. புளித்துவையல் செய்ய அரைகப் தேங்காய்த்துருவல்,2 மிளகாய்வற்றல், 4 கருவேப்பிலை,புளியங்கொட்டை அளவு புளி,சிறிது உப்பு தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
 18. தட்டில் புலாவ்,தேங்காய் புளித்துவையல்,அப்பளம் வைத்து பரிமாறவும்.சூப்பர் பொருத்தம்.
 19. சூப்பராக இருக்கும் நிச்சயம் அரைமணியில் சமைத்து அசத்தி கிச்சனையும் சுத்தம் செய்து வெளியேறி விடலாம்.

எனது டிப்:

தண்ணீர் அளவு அரிசி தரம் பொறுத்து மாறுபடும்.

Reviews for Brinjal pulav( one pot meal) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.